உங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறோம் - கோவை பெண் காவலரை பாராட்டி சத்குரு ட்வீட்
கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையை பல வருடங்களாக செய்து வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக, சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
By : Mohan Raj

'பிரவீனாவுக்கும் அமீனாவுக்கும் வணக்கம், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போருக்கு கண்ணியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் உங்களது கருணைமிக்க அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறோம். உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது' என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் பிரவீனா அவர்கள் கடந்த 7 வருடங்களாகவும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அமீனா என்கிற பெண் காவலர் கடந்த 4 வருடங்களாகவும் 'ஜீவ சாந்தி ட்ரஸ்ட்' எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உடல்களை அடக்கம் செய்யும் சேவையை செய்து வருகிறார்கள். கொரோனா லாக் டவுன் காலத்தில் கூட பாதுகாப்பு கவசம் அணிந்து உடல்களை அடக்கம் செய்ததாக அவர்கள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.