Kathir News
Begin typing your search above and press return to search.

நம் இதயத்துடிப்பை நாமே கேட்கலாம் - கூகுளின் புது முயற்சி!

Google புதியதாக வயர்லெஸ் இயர்பட்ஸ்களின் மூலம் இதயத்துடிப்பை அளவிடும் கருவியை உருவாக்கியுள்ளது

நம் இதயத்துடிப்பை நாமே கேட்கலாம் - கூகுளின் புது முயற்சி!

KarthigaBy : Karthiga

  |  31 Oct 2023 2:30 PM GMT

ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியே காலங்கள் மாறியது. புதிது புதிதாக கண்டுபிடிப்புகள், புது விஞ்ஞான வளர்ச்சி , தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மனித சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அறிவியலின் வளர்ச்சியால் பல்வேறு வகையான ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் உருவாகி அசத்தி வந்தன. அந்த வரிசையில் கூகுள் புதியதாக ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.


மனிதர்கள் தங்களுடைய இதயத்துடிப்பை தாங்களே கேட்கும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயர்பட்ஸ்களை உருவாக்கியுள்ளது. நவீன காலத்தில் இயர்பட்ஸ்களை பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். அனைத்து வகையான ஆடியோக்களையும் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் காதடக்க கருவிகளாக ஒவ்வொருவரும் தங்கள் காதுகளில் மாட்டிக் கொண்டு தங்களுக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் கேட்டு வந்தனர்.

இப்பொழுது அந்த இயர் பட்ஸ்களில் வழியாக உங்களது இதயத்துடிப்பையும் கேட்க முடியும். ஆடியோ பிளெதிஸ்மோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதயத்துடிப்பை கேட்கும் வகையில் இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உபயோகப்படுத்தி பாடல்களை கேட்பதுடன் நமது உடல் நிலையும் சோதித்துக் கொள்ள முடியும். இந்த கருவியில் அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் இயர்பட்ஸ் மூலம் இதயத் துடிப்பு அளவிடப்படுகிறது. இந்த இதயத்துடிப்பு இசிஜி மற்றும் பிற வகையான இதயத்துடிப்பை அளவிடும் கருவிகளை ஒப்பிடுகையில் அதிக வேறுபாடு இல்லை எனவும் பிழை மிகவும் குறைவாக உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


SOURCE :lankasri.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News