Kathir News
Begin typing your search above and press return to search.

'நமக்கு 5 லட்ச ரூபாய் வெட்டாம கோவில் கட்ட முடியாது' - லஞ்சம் கேட்டு வசமாய் சிக்கிய கோவில் வல்லுனர் குழு உறுப்பினர்

கோவில் திருப்பணி செய்ய 5 லட்சம் கேட்ட லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நமக்கு 5 லட்ச ரூபாய் வெட்டாம கோவில் கட்ட முடியாது - லஞ்சம் கேட்டு வசமாய் சிக்கிய கோவில் வல்லுனர் குழு உறுப்பினர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 Oct 2022 2:12 PM GMT

கோவில் திருப்பணி செய்ய 5 லட்சம் கேட்ட லஞ்சம் கேட்ட வல்லுனர் குழு பெண் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலத்தைச் சேர்ந்த பிச்சிமணி என்பவர் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். உபயதாரர்கள் மூலமாக இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் செய்ய முயற்சி எடுத்து அதற்காக இந்து சமய அறநிலையத்துறையில் முறையாக அனுமதியும் பெற்றனர்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தொல்லியல் துறை வல்லுநர் குழுவிடம் அறிவிருக்கை பெற வேண்டி இருந்தது. அந்த கமிட்டியில் இருந்து வந்து கடந்த 2/6/2022 அன்று கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகு ஆய்வு அறிக்கையை வழங்கவில்லை. கோவில் நிர்வாகத்தினர் வல்லுநர் குழுவை தொடர்பு கொண்டு அறிக்கையை கேட்டுள்ளார் அப்போது குழு உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுநர் மூர்த்திஈஸ்வரி என்பவர் கடந்த ஆண்டு 12/10/2022 ஆம் அன்று மீண்டும் கோவிலுக்கு வந்து டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அறிக்கை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பிச்சுமணி உபயோதாரர்களிடம் அவ்வளவு தொகையை கேட்க முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வு அறிக்கையை வழங்க முடியும் எனவும் முன்பனமாக ஒரு லட்ச ரூபாய் வேண்டுமெனவும் மூர்த்திஈஸ்வரி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின் படி மூர்த்திஈஸ்வரியிடம் ஒரு லட்ச ரூபாய் பிச்சுமணி கொடுத்த போது போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் மூர்த்திஈஸ்வரி காரை சோதனை செய்தபோது அதில் கணக்கில் வராத 5 லட்ச ரூபாய் இருந்ததை கண்டுபிடித்து போலீசார் கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் இந்த குழுவினரால் ஆய்வு அறிக்கை வழங்கப்படாமல் தமிழகத்தில் பல கோவில்களில் திருப்பணி நடைபெறாமல் இருப்பது தெரியவந்துள்ளது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News