பட்னாவிஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பலமுறை பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளோம், அப்போது பேசாதவர்கள் இப்போது ஏன் நிபந்தனை - அமித்ஷா!
பட்னாவிஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பலமுறை பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளோம், அப்போது பேசாதவர்கள் இப்போது ஏன் நிபந்தனை - அமித்ஷா!
By : Kathir Webdesk
மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது அதற்கு பதிலளித்து பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனை விதிக்கும் நிபந்தனை ஏற்கத்தக்கது அல்ல என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நானாக இருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வராவார் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தோம் பல கூட்டங்களில் பல தடவை நாங்கள் பட்னாவிஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பேசி உள்ளோம் அப்போது பேசாதவர்கள் இப்போது ஏன், இது என்ன புதிய நிபந்தனை ,
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்க்கு பதிலளித்து பேசிய உள் துறை ,ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் எந்த மாநிலத்திற்கும் ஆட்சியமைக்க 18 நாட்கள் கொடுக்கப்பட்டதில்லை,சட்டசபை பதவிக்காலம் முடிந்த பின்னரே, கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் ,தற்போது கூட பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.