ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்,முதல் முறையாக வாயைத் திறந்த காங்கிரஸ்!
ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்,முதல் முறையாக வாயைத் திறந்த காங்கிரஸ்!
By : Kathir Webdesk
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவொரு தனிநபர், குழு, சமூகங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்படவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்’ என ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.