இந்தியாவில் தயாரிப்போம் என்பது போல இந்தியாவில் திருமணம் செய்வோம் உள்நாட்டு வளங்களை பெருக்குவோம்- பிரதமர் மோடி!
ஆயுஷ்மான் திட்டத்தினால் ஆறு கோடி பேர் பயனுடைந்துள்ளனர் என்றும் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை தவிர்த்து விட்டு இந்தியாவிலேயே திருமணம் செய்வோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
By : Karthiga
மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தால் 6 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார். புற்றுநோய் போன்ற தீவிர நோய்க்கு சிகிச்சை அளிப்பது எந்த ஒரு நபருக்கும் அல்லது குடும்பத்திற்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.எனவே புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதில் மக்கள் இடையர்களை சந்திக்க கூடாது என்பதை எங்கள் அரசு உறுதி செய்திருக்கிறது. இதற்காக சுமார் 30 புதிய ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மலிவு விலையில் மருந்துகளும் கிடைக்க வசதி செய்யப்பட்டு இருக்கின்றன.
மேலும் 10 ஆஸ்பத்திரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. புற்றுநோயின் தொடக்கநிலை சிகிச்சைக்காக கிராம அளவில் 1.5 லட்சத்துக்கு அதிகமான சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய நிலையங்கள் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோயை முன்கூட்டியே கண்டறிய உதவியுள்ளன. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் 6 கோடிக்கு அதிகமான பயனாளிகளுக்கு உதவியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயாளிகள் ஆவார்கள். வெளிநாடுகளில் திருமணம் செய்வது சரியானதா? இதற்காக இந்தியாவின் எவ்வளவு செல்வம் வெளிநாடுகளுக்கு செல்கிறது. நமது நாட்டில் திருமணம் செய்ய முடியாதா? இப்படி வெளிநாடுகளில் திருமணம் செய்யும் நோய் உங்களுக்கு சமூகத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நமது வளங்கள் உள்நாட்டிலேயே நீடித்திருக்க இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்வேன். இந்தியாவில் தயாரிப்போம் என்பது போல இந்தியாவில் திருமணம் செய்வோம். இதே போல உள்நாட்டு சுற்றுலாவை ஊக்கப்படுத்த உதவுங்கள். நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் உள்நாட்டில் செல்லுங்கள். முடிந்த அளவு உங்கள் உள்நாட்டுக்குள் சுற்றுலா செல்லுங்கள். உங்கள் நாடு முழுவதும் பயணம் செய்யுங்கள் உங்கள் நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துங்கள் இவ்வாறு மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI