Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம் - இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச!

இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம் - இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச!

இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம் - இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 1:28 PM GMT


இந்தியாவின் நலனுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார் இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று வருகிற 29-ஆம் தேதி இந்தியா வருகிறார், நட்பு நாடு என்ற வகையில் தங்கள் இந்தியாவோடு இணைந்து பணியாற்றுவோம் என்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.



இலங்கை நடுநிலையான நாடாக இருக்க விரும்புகிறது என்று கூறிய அவர் இலங்கை மிகவும் சிறிய நாடு என்று தெரிவித்தார் உலக முதலீடுகளை விரும்புகிறோம் என்றும் ஆனால் ராணுவ நடவடிக்கைக்கு அல்லது உலக அரசியல் போட்டிக்கு இலங்கை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார், இனவெறி படித்தவர் என்ற புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச விடுதலை புலிகளோடு உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது இந்த கருத்து உருவானது என்றும் தான் ஒழுக்கமானவர் இனவெறி பிடித்தவர் அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News