நாம் முதலில் இந்து அடுத்தது தான் எல்லாம் ! - தெறிக்கவிட்ட OP.ரவீந்திரநாத்குமார் MP.
நாம் முதலில் இந்து அடுத்தது தான் எல்லாம் ! - தெறிக்கவிட்ட OP.ரவீந்திரநாத்குமார் MP.
By : Kathir Webdesk
சில நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறது தென் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனீ மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார் தேனி பாராளுமன்ற உறுப்பினர் OP. ரவீந்திரநாத்குமார்.
OP. ரவீந்திரநாத்குமார். தனது தோளில் காவித்துண்டு அணிந்து விழாவில் கலந்து கொண்டார் அவர் விழாவில் பேசுகையில் திருச்சியில் ரயில்வே துறை கூட்டம் நடைபெற்றதால் , இங்கு வருவதற்கு சற்று நேரமாகி விட்டது. தேனி மாவட்டத்தில் போடி - மதுரை அகல ரயில்பாதை திட்டத்தை விரைவில் பணிகளை முடித்து தர வேண்டும் திண்டுக்கல் - லோயர்கேம்ப் புதிய ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் வேண்டும் என்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில்பரிந்துரைத்துள்ளேன் என்றார் .
சென்ற ஆண்டும் , இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை நான் தொடங்கிவைத்தேன். தற்போது, பாராளுமன்ற உறுப்பினராக இந்த விழாவை தொடங்கிவைத்துள்ளேன். கடந்த ஆண்டு இந்த விழாவில் நான் பேசிய போது , மோடியே அடுத்த பிரதமராக வருவார் எனக் சொன்னேன் . அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார்.
இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் அடுத்தது என என பேசினார் .
OP.ரவீந்திரநாத்குமார் MP.