Kathir News
Begin typing your search above and press return to search.

வலைதள தூதர்கள் பயிலரங்கம்! செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது!!

வலைதள தூதர்கள் பயிலரங்கம்! செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது!!

வலைதள தூதர்கள் பயிலரங்கம்! செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Sept 2019 11:49 AM IST



Tamilagam Research Foundation மற்றும் Thamarai Sakthi இணைந்து வலைதள தூதர்கள் பயிலரங்கம் (Social Media Writing Workshop) நடத்துகிறது.


சமூக வலைத்தளங்களில் ஆக்கப்பூர்வமான தகவல்களை பகிர்வது, போலி பிரச்சாரங்கள் மற்றும் தகவல்களை கண்டறிந்து அதற்கு தகுந்த பதிலளிப்பது, நல்ல செயல்களையும், நல்ல மனிதர்களையும் அடையாளப்படுத்துவது, வலைபதிகள் எழுதுவது எப்படி?, சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவமு எப்ப? சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்மான செயல்களுக்கு பயன்படுத்துவது போன்றவைகளை முக்கிய பொருட்களாக கொண்டு இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது.


சென்னை வேளச்சேரி டான்சி நகர், 5-வது தெருவில் உள்ள ஸ்ரீ சாய் சங்கர மஹாலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (22.09.2019) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.


இந்த பயிலரங்கத்தில் எழுத்தாளர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஹரன் பிரசன்னா, அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்கின்றனர்.


பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், நிகழ்ச்சியில் கலுந்துகொள்ளும் அனைவருடனும் கலந்துரையாடுகிறார்.


இதில் மாணவர்கள், பணி செய்பவர்கள், சமூக வலைதள ஆர்வல்கள், வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ளலாம்.


பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவர்கள், கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளப்படுவார்கள்.


அரங்கத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை 100 மட்டுமே உள்ளதால், First Come First Serve அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.


இந்த வலைதள பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயனடைய விரும்புகிறவர்கள், கீழ்கண்ட link மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். (Register here to submit your application.)


https://forms.gle/HVSj1Dh14uqreWum8


Next Story
கதிர் தொகுப்பு
Trending News