Kathir News
Begin typing your search above and press return to search.

டி20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கு இந்தியா தீவு!

டி20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கு இந்தியா தீவு!

டி20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கு இந்தியா தீவு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 March 2020 10:52 AM IST

மேற்கு இந்தியா தீவு அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற ஒருநாள்போட்டியை இலங்கை அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் மேற்கு இந்தியா தீவு அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் மேற்கு இந்தியா தீவு அணி வெற்றி பெற்று 1-0 என என்ற புள்ளி கணக்கில் முன்னிலை இருந்தது.

மேலும் இரண்டாவது டி20 போட்டியில் நேற்று நடந்தது. அதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியா தீவு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி களம் இறங்கி 20 முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்தியா தீவு அணி 156 ரன்கள் அடித்தல் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்தது. மேற்கு இந்தியா தீவு அணி 17 ஓவரில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 158 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதனால் டி20 தொடரை 2-0 என புள்ளி கணக்கில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News