மூட்டுவலிக்கு சமையல் பொருளான இதை பயன்படுத்தலாமாம் !
What are the benefits of apple cider vinegar?
By : Bharathi Latha
சமையலில் பெரும்பாலான பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிள் வினிகர் பயன்படுத்த படுகிறது. இதில் ஏராளமான நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு வலி நிறைந்த இடத்தில் சிறிதளவு ஆப்பிள் வினிகரைப் பூசி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்களுக்கு இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இந்த செயல்முறை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. கழுத்து வலிக்கு நிவாரணம் அளிக்கவும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. கழுத்து வலியால் அவதிப்படுகிறவர்களின் கழுத்தில் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகருடன் தண்ணீர் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்க, ஆப்பிள் சைடர் வினிகரின் சில துளிகளை முகப்பருக்களில் தடவவும்.
ஈஸ்ட் தொற்றுநோயை குணப்படுத்த ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தப் படுகிறது. தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை கலந்து பயன்படுத்துவதன் மூலம் ஈஸ்ட் தொற்றுக்கு விரைவான நிவாரணம் அளிக்கிறது. ஆப்பிள் வினிகர் உடலில் சேரும் கெட்டக் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது. ஆப்பிள் வினிகருடன் தேன் அல்லது தண்ணீரைச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். வெயில் காரணமாக சருமத்தில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்பட்டால், தண்ணீரில் ஆப்பிள் வினிகரை கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இது வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் நன்மை பயக்கிறது. தினசரி ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறதளவு ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து உட்கொள்ளுங்கள். இதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இயலும்.
இருந்தாலும் ஆப்பிள் வினிகரை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆப்பிள் சைடர் வினிகர் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது, எனினும் இதன் அதிகப்படியான உட்கொள்ளல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. ஆப்பிள் வினிகரில் உள்ள அமில தன்மையின் காரணமாக, இதன் அதிகப்படியான பயன்பாடு வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். ஆப்பிள் சைடர் வினிகரை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இது தோல் அரிப்பை ஏற்படுத்தக்கூடும். பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதைத் தடுக்க மக்கள் அதிக அளவில் ஆப்பிள் வினிகரைப் பயன்படுத்துகிறார்கள். எனினும் அதில் உள்ள அமிலம் பற்களின் மஞ்சள் நிறத்தை அதிகரிக்கிறது.
Input & Image courtesy:Logintohealth