கண்களை இனி தேய்காதீர்கள், இதை பயன்படுத்துகள் போதும் !
What are the causes of itching in eyes.
By : Bharathi Latha
கண்களில் அரிப்பு ஏற்படுவது, ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது போன்ற சமயங்களில், கண்களைச் சுற்றி எரிச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் கண் எரிச்சல் சிக்கலுக்கு, ஒரு பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகிறார்கள். கண் எரிச்சல் பிரச்சினைகள், ஒவ்வாமை காரணமாகவும் எழக்கூடும். மற்றும் கண்களைத் தேய்ப்பதன் மூலம், இதன் நிலை மோசமடையக்கூடும். கண் எரிச்சலை உண்டாகும் கிருமிகள் கண்திரைக்கு தீங்கு விளைவிக்கிறது. கண்களை மீண்டும் மீண்டும் தேய்ப்பதன் விளைவாகவும் அரிப்பு ஏற்படுகிறது. கண்கள் அதிக மாசுபடுவதன் காரணமாகவும் சேதம் ஏற்படுகிறது.
கண்களைத் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள். இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மேலும், கண் எரிச்சலிளிருந்து நிவாரணம் பெற பனிக்கட்டியைப் பயன்படுத்த வேண்டும். எனினும், கண் எரிச்சல் சிக்கல் அதிகரிக்கும் போது, ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். கண்கள் மிகவும் மென்மையானவையாகும், இதனால் கண்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் கண்களில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. லென்ஸ்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால், கண்களில் அரிப்பு ஏற்படுகிறது. கண்களைச் சுற்றியுள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏதேனும் சிக்கல் உண்டானால், கண்ணீரில் எண்ணெய் இருப்பதில்லை. சில நச்சுகளின் காரணமாகவும் கண்களில் வீக்கம் மற்றும் கண்களில் சிவப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சில நுண்ணுயிரிகள் கண் அரிப்புக்கு வழிவகுக்கிறது.
கண்களில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க, பின்வரும் சில தீர்வுகளைப் பயன்படுத்துங்கள். நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டுமாயின், கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள். வைட்டமின் A மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். கண்களில் வலி உண்டானால், கண்களைத் தேய்க்க வேண்டாம். நிவாரணம் பெற பனிக்கட்டியைப் பயன்படுத்தவும். ஒவ்வாமை கொண்ட எந்தவொரு பொருட்களின் பயன்பாட்டையும் தவிர்க்கவும். தூசி மற்றும் அழுக்கிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும். கண்களைப் பாதுகாக்க கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். வீடு மற்றும் அலுவலகத்தில் சீரான வெப்பநிலையை பராமரிக்கவும். ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக, ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Input & image courtesy:logintohealth