Kathir News
Begin typing your search above and press return to search.

மழலைகளுக்கு ஏற்படும் மன இறுக்கம், கவனிக்காவிட்டால் பெரிய பிரச்சினை ஏற்படலாம் !

What are the problem faced by autism children?

மழலைகளுக்கு ஏற்படும் மன இறுக்கம், கவனிக்காவிட்டால் பெரிய பிரச்சினை ஏற்படலாம் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Sep 2021 1:35 AM GMT

மன இறுக்கம் (Autism) என்பது குழந்தைகளிடத்தில் காணப்படுகின்ற ஒரு வகை மன நோயாகும். மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். இது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு மன நோயாகும் இது கவனிக்காத ஒரு விஷயம். உதாரணமாக அவர்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். பெரும்பாலும் ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த நோய் பாதிக்கிறது. ஆட்டிஸ்டிக் குழந்தைகள் சாதாரண குழந்தைகளை காட்டிலும் பெரிதும் வேறுபட்டு இருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி 2008 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2 ஆம் தேதியை மக்கள் ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 110 குழந்தைகளில் ஒரு குழந்தை மன இறுக்கத்தால் பாதிக்கப்படுகிறது என்று சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சகம் தெரிவிக்கின்றது.


மன இறுக்கம் என்பது குழந்தைகளின் இயல்புநிலையை பாதிக்கும் ஓர் வளர்ச்சி தொடர்பான கோளாறாகும். இது குழந்தைகளின் சமூக தொடர்பு மற்றும் நடத்தை போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பின்வரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், அவை, பேசுவதில் சிரமம், அவர்களிடம் கேட்கபடும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் தவிப்பது, முன்பு கூறிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் கூறுவது, பிறருடன் பேசும்போது இயல்பான கண் தொடர்பு கொள்ள முடியாமலிருப்பது, மற்றும் புதிய நபர்களை சந்திக்க பயப்படுவது. மனிதர்களுக்கு உண்டாகும் பல்வேறு நோய்களின் பட்டியலில் மன இறுக்கம் மூன்றாவது இடத்தில் உள்ளது.


மன இறுக்கத்தை குணப்படுத்த சிகிச்சை ஏதுமில்லை. எனினும் பின்வரும் இரண்டு சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்மை பயக்கிறது. நடத்தை மற்றும் சமூக தொடர்பு வழி சிகிச்சை. இந்த சிகிச்சையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மக்களுடன் எவ்வாறு பேசுவது, சமூக அமைப்புகளில் தன்னைதாமே எவ்வாறு கவனித்து கொள்வது, மற்றவர்களைச் சுற்றி இருக்கும் போது எப்படி நடந்துகொள்வது போன்ற குணங்கள் கற்பிக்கப்படுகின்றது. கல்வி வழி சிகிச்சை, ஆட்டிசம் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சிறப்பு கல்வியை கற்பிக்க பல நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழு உள்ளது.

Input & image courtesy:Logintohealth



Next Story
கதிர் தொகுப்பு
Trending News