Kathir News
Begin typing your search above and press return to search.

'இந்தியா' பெயர் 'பாரத்' என்று மாற்றப்பட்டால்?- பிரபலங்களின் கருத்து!

இந்தியா பெயரை மாற்றலாமா ? அதற்கு சினிமா பிரபலங்கள் கூறிய கருத்துக்கள் பற்றி காண்போம்.

இந்தியா பெயர் பாரத் என்று மாற்றப்பட்டால்?- பிரபலங்களின் கருத்து!

KarthigaBy : Karthiga

  |  6 Sep 2023 5:45 PM GMT

'இந்தியா' பெயர் பாரத் என்று மாற்றப்படலாம் என தகவல்கள் பரவியுள்ளன. நடிக்கும் நடிகைகளும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். நடிகை கங்கனா ரணாவத் பதிவில் இந்தியாவை பாரத் என்று அழைக்க வேண்டும் என நீண்ட காலமாக சொல்லி வருகிறேன் . மகாபாரத காலத்தில் இருந்தே குருசேத்திரப் போரில் பங்கேற்ற அனைத்து ராஜ்ஜியங்களும் 'பாரதம்' என்ற கண்டத்தின் கீழ் வந்தன.


பாரதம் என்ற பெயர் அர்த்தம் உள்ளது. ஆங்கிலேயர்கள் தான் இந்தியா என்ற பெயரை வைத்தனர். அதன் மூலமாக நம்மை அடிமைகளாக பார்த்தார்கள். முந்தைய பண்டைய அகராதியில் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளனர். அதை சமீபத்தில் மாற்றினர் . இந்தியா நமது நாட்டின் பெயர் அல்ல . நாம் எல்லோரும் பாரத தேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார் .


இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் கூறும் போது ,ஜனாதிபதி மாளிகையில் ஜி 20 உச்சி மாநாட்டில் இரவு உணவு அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆப் பாரத் என்ற அச்சிடப்பட்டதில் என்ன சிக்கல் இருக்கிறது? நாட்டின் பெயரை மாற்றினாலும் நமது உணர்வுகளோ தாய் நாட்டின் மீது நாம் வைத்துள்ள பற்றோ மாறப்போவதில்லை என்று கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News