Kathir News
Begin typing your search above and press return to search.

பிரச்சனையின் தீர்வு, முத்தம். இதை நவீன மேலாண்மையில் "kiss principle"' என்கிறார்கள்..

பிரச்சனையின் தீர்வு, முத்தம். இதை நவீன மேலாண்மையில் "kiss principle"' என்கிறார்கள்..

பிரச்சனையின் தீர்வு, முத்தம். இதை நவீன மேலாண்மையில்  kiss principle என்கிறார்கள்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 2:59 AM GMT

"The KISS Principle......

Keep it Short and Simple " என்கிறார்கள் ஆங்கிலத்தில்

பிரச்சனை

பிரபலமான சோப் நிறுவனத்தின் மீது, வாடிக்கையாளர் ஒருவர் ஓர் வழக்கை பதிவு செய்தார். அவர் வாங்கிய சோப் பெட்டியில் சோப் இருக்கவில்லை. எதிர்பாரதவிதமாக அது காலியாய் இருந்தது. வழக்கை சந்தித்த பின், அந்த நிறுவனம் இந்த தவறு எப்படி நடந்தது என ஆய்வு செய்தது. சோப்புகளை தயாரிப்பது, அதை பெட்டியில் அடைப்பது என சகல வேலைகளையும் இயந்திரங்களே செய்கின்றன. பெட்டிகள் வரிசையாக இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிற போது எதோ சில காரணங்களால் ஒரு பெட்டியில் மாத்திரம் சோப் அடைக்கப்படாமல் விடுபட்டது தெரியவந்தது. இனியொருமுறை இது போல் தவறு நேர்ந்தால், அதை கண்டறிவது எப்படி, இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன? என அந்நிறுவனத்தின் பொறியாளர்களை கேட்டனர்.

தீர்வு 1

பொறியாளர்கள் மிக தீவிரமாக ஆலோசித்து, ஆய்வு செய்து ஒரு வழியை கண்டறிந்தனர். X-ray இயந்திரத்திற்க்கு ஒத்த ஒர் இயந்திரத்தை அவர்கள் வடிவமைத்தனர். உற்பத்தி முடிவடைந்து பெட்டியில் அடைக்கப்படும் ஒவ்வொறு சோப்பும் இந்த இயந்திரத்தை தாண்டி செல்லும். அப்படி கடந்து செல்கிற போது அதனொடு இணைக்கப்பட்ட திரையில் பெட்டியினுள் சோப் இருக்கிறதா இல்லையா என்பது தெரியும். இதனை கண்காணிக்க அந்த திரையின் முன் ஒரு நபர் பணியமர்த்தபடவேண்டும். அவர் அந்த திரையை பார்த்து, கடந்து செல்லும் ஒவ்வொறு பெட்டியிலும் சோப் இருக்கிறதா இல்லையா என்பதை கண்காணிப்பார். இந்த தீர்வினை மிகவும் கடினமான உழைப்பையும், பணத்தையும் கொட்டி கண்டறிந்தறிந்திருதனர் பொறியாளர்கள்.

தீர்வு 2

இதே பிரச்சனையை ஓர் சிறிய நிறுவனம் அதன் பணியாளர்களிடம் விளக்கி இப்படி ஒர் சூழல் நம் நிறுவனத்திற்க்கு நேர்ந்தால் என்ன தீர்வு சொல்வீர்கள் என்று கேட்டதற்க்கு. அந்நிறுவனத்தின் சாதரண ஊழியர் ஒருவர் X-ray இயந்திரம் போன்ற கடுமையான யோசனைகள் ஏதுமின்றி மிக எளிதாக ஒரு தீர்வை சொன்னார். அவர் சொன்னதற்க்கு ஏற்ப வலிமையான, வடிவில் பெரிதான ஒர் எலக்ட்ரிக் ஃபேன் (electric fan) பெட்டிகள் வரிசையாக அணிவகுத்து வரும் பாதையின் மேல் பொருத்தப்பட்டது. ஒவ்வொறு சோப் பெட்டியும் இந்த ஃபேனை கடந்து போகையில், காலியான பெட்டி அந்த வரிசையிலிருந்து பறந்து விழுந்துவிடும்.

அவ்வளவு தான்....பிரச்சனை தீர்ந்தது!!!!

எப்போதும் எளிமையான தீர்வுகளை தேடுங்கள். பிரச்சனைகள் எவ்வளவு பெரிதானதாகவும் இருக்கலாம். பிரச்சனைகளை விடவும் தீர்வுகளில் கவனம் செலுத்தினால் கடினமான சூழலை எளிதாக கடக்கலாம்....என்கிறது நவீன மேலாண்மை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News