Kathir News
Begin typing your search above and press return to search.

சந்தியாவந்தனம் என்றால் என்ன?

ஏன் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

சந்தியாவந்தனம் என்றால் என்ன?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Feb 2020 8:46 AM IST

சூரியனை வணங்கும் பிரத்யேக முறைக்கு சந்தியாவந்தனம் என்று பெயர். பண்டைய இந்தியாவில் ப்ராமண வைஸ்ய மற்றும் ஷத்ரியர்கள் (சூத்திரர்களுக்கு தடை இருந்திருக்க வில்லை) இந்த சந்தியாவந்தனத்தை தவறாமல் செய்து வந்தனர். இதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. சந்தியாவந்தனம் மூன்று முறை செய்யப்படுகிறது, காலை சூரியன் உதிக்கும் நேரம் மதியம் சூரியன் உச்சி யில் நிற்கும் நேரம் மற்றும் மாலை பொழுது இது முறையே முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தி என்று கூறப்படுகிறது.

சந்தியா காலம் என்பது மிகவும் சக்தி மிக்க காலமாக கருதப்படுவதால் இந்த நேரத்தில் செய்யும் பிராத்தனை அதிக பலன் தருவதாகும். இது இரண்டு பாகங்களாக இருக்கிறது முதல் ஜல பாகம் அதாவது நீரினால் செய்யக்கூடிய பிராத்தனை இரண்டாவது நில பாகம் அதாவது நிலத்தின் மீது செய்யக்கூடிய பிராத்தனை. ஜல பாகத்தில் அர்க்யம் என்கிற வழிமுறையை கடைபிடிக்கிறார்கள் அதாவது நீரை இரு கைகளால் அள்ளி வானத்தில் இறைப்பது, நில பாகத்தில் தண்ணீரை வலது உள்ளங்கையில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி குடிக்க வேண்டும். பிறகு தண்ணீரை கைகளில் வைத்துக்கொண்டு விரல்களினால் இரண்டு கன்னங்கள் கண்கள், மூக்கு துவாரங்கள், தோள்கள், நெற்றி, தொப்புள் பகுதி ஆகியவற்றை மந்திரங்கள் சொல்லி தேய்க்க வேண்டும் இப்படி செய்வதால் குறிப்பாக விரல்களினால் செய்வதால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறுகிறது மனம் தெளிவாகிறது சந்தியா வந்தனத்தின்போது காயத்ரி ஜெபத்தை சொல்ல வேண்டும்.

காயத்ரி ஜெபத்தை குரு முகமாக உபதேசிக்கப்பட்ட யாவரும் சந்தியாவந்தனம் செய்யலாம். பெண்களுக்கு இதில் எந்த தடையும் இல்லை, காயத்ரி மந்திரத்தை குரு முகாமாக பெற்று அவர்களும் இதை செய்யலாம். இந்த முறையை பின்பற்றினால் மனம் புத்துணர்ச்சி பெற்று முகம் பொலிவு பெரும். நமது நரம்பு மண்டலங்களுக்கு இந்த பயிற்சி மிக அற்புதமாக பயனளிக்கிறது.

சந்தியாவந்தனத்தை நீர் நிலைகளில் செய்வது மிக நன்மை தரும் இல்லை என்றால் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொண்டும் செய்யலாம் மற்ற இரண்டு வேளைகளில் செய்ய முடியாதவர்கள் காலை நேரத்தில் விடாமல் செய்ய வேண்டும். இதை தொடர்ந்த செய்பவர்கள் வாழ்வு அற்புதமான மற்றம் அடையும் என்பது ஐதீகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News