Kathir News
Begin typing your search above and press return to search.

க்ரெட்டா தன்பர்க் தெரியாமல் உடைத்த குட்டு என்ன? சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்படும் சதி.!

க்ரெட்டா தன்பர்க் தெரியாமல் உடைத்த குட்டு என்ன? சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்படும் சதி.!

க்ரெட்டா தன்பர்க் தெரியாமல் உடைத்த குட்டு என்ன? சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்படும் சதி.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  4 Feb 2021 1:41 PM IST

அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் போர்ன் நடிகை மியா கலீஃபா ஆகியோர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான குறிவைத்த பிரச்சாரத்தில் ட்விட்டரில் நேற்று குதித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி க்ரெட்டா தன்பெர்க்கும் இந்த விஷயத்தில் தனது பங்களிப்பை பதிவு செய்தார்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு, உலகெங்கிலும் உள்ள மக்கள் பங்களிக்கும் விதத்தை விவரிக்கும் ஒரு கூகுள் டாக்குமெண்ட்டை அவர் பகிர்ந்தபோது தான் விஷயம் வினையாகிப் போனது.

‘உலகளாவிய விவசாயிகள் போராட்டம்- முதல் அலை’ என்ற தலைப்பில் உள்ள இந்த ஆவணம், உலகெங்கிலும் உள்ள மக்களை மனித வரலாற்றில் ‘மிகப்பெரிய போராட்டத்தின்’ ஒரு பகுதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.வேளாண் துறையை கார்பொரேட் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே இதன் நோக்கம் என்றும் கூறிக் கொள்கிறது.

ஜனவரி 23 அன்றே குறைந்தது இந்த செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளது. அதாவது ஜனவரி 26, குடியரசு தின பேரணிக்கு முன்பாகவே சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பெரும் போராட்டம் ஆன்லைனிலும், நிஜ வாழ்விலும் போராட வேண்டிய வழிமுறையைப் பற்றி விரிவாக பேசுகிறது.

இந்த ஆவணம், ஆன்லைனில் மட்டுமல்லாமல் களத்திலும் இந்திய தூதரகங்களுக்கு அருகில் சென்று போராடும் படியும் கேட்கிறது.

முழுவதுமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 4 மற்றும் 5ஆம் தேதியில் 11 மணி முதல் 2 மணி வரை ட்விட்டரில் எந்த மாதிரியான ஹாஷ்டாக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

இப்படி ஒவ்வொரு கட்டமாக வழி காட்டப்பட்டிருக்கும் இந்த ஆவணத்தின் தன்மை இது அதிக நிதி வழங்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பதை தெளிவாக தெரிவிக்கிறது. இந்தப் போராட்டங்கள் தானாகவே நடக்கவில்லை.

ஜனவரி 26 ஆம் தேதி இந்திய தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், அம்பானி அதானி அலுவலகங்களிலும் கூட போராட்டம் நடத்த வேண்டும் என்று முன்பே கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமானது பிப்ரவரி 21 முதல் 26 வரை இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதற்கான திட்டங்களையும் காட்டுகிறது.

பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த ஆவணத்தில் இந்தியா மனித உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளை பின்பற்றுவதாக குற்றம் சாட்டுகிறது.

இந்தியா பல மனித உரிமை மீறல்கள், வன்முறை மற்றும் கொடூரமான அலட்சியத்தை அதன் வலுவில்லாத குடிமக்கள் மீது கொண்டிருப்பதாகவும், ஜனவரி 26 ஆம் தேதி அரசாங்கம் தங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒரு ராணுவ அணிவகுப்புடன் கொண்டாடினாலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருவதாக இதில் ஒரு வரி கூறுகிறது.

இந்த ஆவணத்தின் ஒரே நோக்கம் இந்தியாவை குறித்து பொய்களையும் புனைகதைகளையும் பரப்புவதாகத் தெரிகிறது. இந்த போராட்டங்களில் இருக்கும் சர்வதேச கவனம் தான் இந்தியா ஒரு பெரும் வன்முறையும்/படுகொலையும் நிகழ்த்துவதில் இருந்து தடுப்பதாக கூறுகிறது.

அம்பானி மற்றும் அதானி போன்ற இந்திய தொழில் அதிபர்களிடம் இருந்து உலக நிறுவனங்களை வெளியேற்ற சர்வதேச உதவியை நாடும் ஒரு திட்டமும் இருப்பதாக தெரிகிறது. இந்த ஆவணத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டு, படிக்க ஆரம்பித்து, பலரும் தரவிறக்கம் செய்தவுடன் தங்கள் தரப்பு தவறை உணர்ந்த க்ரெட்டா அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்.

பாப் பாடகி ரியானா வெளியிட்ட ட்விட்டும் ஜனவரி ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்ட இந்த 'போராட்டத்தின் ஒரு பகுதி தான் என்பதும் தெரிய வந்துள்ளது.


விவசாய சட்டங்களை விவரிப்பதாக கூறும் இந்த ஆவணத்தின் ஒரு பகுதி இந்திய ஜனநாயகத்தையும் இந்திய பிரதமரையும் குறித்து தவறான பொய்களையும் பரப்புகிறது. இந்த நிகழ்வின் மூலம் இந்தியாவிற்கு எதிரான சரவதேச இடதுசாரி, இஸ்லாமியவாத, காலிஸ்தானிய சதி எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News