மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி உண்மை என்ன? போலி செய்திகளுக்கு பதிலடி
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதி உண்மை என்ன? போலி செய்திகளுக்கு பதிலடி
By : Kathir Webdesk
இந்தியாவின் மத்திய வங்கியான, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் அரசுக்கு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதியளிக்கிறது. முதலீடுகள், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், நாணயங்கள் தயாரித்தலுக்குப் பிறகு வழக்கமாக ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதி இருக்கும்.
தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, கூடுதல் நிதியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும். ஆனால் கடந்த ஆண்டு அரசுக்கு அளித்ததைவிட,இப்போது இரு மடங்கிற்கும் அதிகமான தொகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை அரசு பெறுவதால் இந்த விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஆனால் உண்மையில் இந்த ஆண்டு பெருமளவில் அரசின் பங்கு பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கியது. அவற்றை வங்கிகள் மூலமாகவும், நேரடியாகவும் வெற்றிகரமாக விநியோகம் செய்து அவற்றின் மீதான வட்டி மூலமாக ரிசர்வ் வங்கியின் உபரி நிதி அதிகரித்துள்ளது. எனவேதான் மத்திய அரசுக்கு அளிக்கும் உபரி நிதியின் அளவு கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி எதையும் தெரிந்து கொண்டோ அல்லது புரிந்து கொண்டோ பேசாதது அவரது அறியாமையை காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
“ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிப்பது வழக்கமானதுதான். இது அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒன்று அல்ல. இந்த ஆண்டு உபரி அதிகமாக இருப்பதால், மொத்தத் தொகை பெரிதாகத் தோன்றுகிறது,'' என்று ஐ.டி.எப்.சி. ஏ.எம்.சி.யில் நிரந்தர வருவாய்ப் பிரிவுத் தலைவராக இருக்கும் சுயஷே சவுத்ரி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில், பொருளாதாரத்துக்கு உந்துதலை ஏற்படுத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நடவடிக்கைகள் பங்குச் சந்தைகளுக்கு நல்ல செய்தியை அளிப்பதாக உள்ளது என்றும், திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தையில் இரண்டு சதவீதம் உயர்வு ஏற்பட்டது என்றும் நிபுணர்கள் கூறினர்.