Kathir News
Begin typing your search above and press return to search.

எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளது?- ரிசர்வ் வங்கி தகவல்!

76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளது?- ரிசர்வ் வங்கி தகவல்!

KarthigaBy : Karthiga

  |  4 July 2023 9:45 AM GMT

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19- ஆம் தேதி அறிவித்தது . இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்த மாற்றிக் கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் பல்வேறு வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். மேலும் தங்கள் கணக்குகளிலும் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் 76 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கிகளில் இருந்து கிடைத்த புள்ளி விவரங்களின்படி கடந்த 30 - ஆம் தேதி வரை ரூபாய் 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளன. இதன் மூலம் 76 சதவீத நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து 84,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News