Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா வலிமையான நாடாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்? - பிரதமர் மோடியின் அசத்தல் உரை!

அரசின் திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் அதிகாரம்பெறும்போது இந்தியா வலிமையான நாடாக மாறும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா வலிமையான நாடாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்? - பிரதமர் மோடியின் அசத்தல் உரை!

KarthigaBy : Karthiga

  |  9 Jan 2024 4:30 AM GMT

மத்திய அரசின் முன்னோடி திட்டங்களின் பலன்கள் குறித்த காலத்துக்குள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் சிறப்பு யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மோடி அரசின் உத்தரவாத வாகனங்கள் நாட்டின் தொலைதூர கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று அரசியல் திட்டங்களின் பலன்களை வழங்கி வருகின்றன. கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஐந்தாம் தேதி உடன் 10 கோடி பங்கேற்பாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது . இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதலே அதன் பயனாளிகளை பிரதமர் மோடி அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் நேற்று காணொலி காட்சி மூலம் இந்த திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார் அப்போது அவர் கூறியதாவது :-


வளர்ந்த இந்தியா யாத்திரையின் மிகப்பெரிய நோக்கம் அரசு திட்டங்களின் தகுந்த பயனாளிகள் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதே ஆகும். அரசு திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர் .இன்று இந்தியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிலும் மோடியின் உத்தரவாதம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஏழைகளின் ஆரோக்கியத்துக்கு இந்த யாத்திரை வரப்பிரசாதமாக இருக்கிறது. பல தலைமுறைகளாக ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் போராடி வருகிறார்கள். முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போதைய தலைமுறை வாழக்கூடாது என்று அரசு விரும்புகிறது.


அதைவிட மேம்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். எனவே நாங்கள் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஏழைகள் விவசாயிகள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய நான்கு ஜாதியினரும் அதிகாரம் பெறும்போது இந்தியா வலிமையான நாடாக மாறும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற எங்களது கடமைகளை கட்டாயம் செய்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News