இயற்கை மூலிகை எனப்படும் இந்த களிமண் பற்றிய சுவாரசிய தகவல் !
What are the nutrients found in Multani Mitti?
By : Bharathi Latha
முல்தானி மெட்டி என்று பிரபலமாக அழைக்கப்படும் இது ஒரு வகை களிமண் ஆகும். இது சருமத்தின் தரம் மற்றும் அமைப்பை அழகுபடுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுகிறது. இது பிற சாதாரண மண்களிலிருந்து மிகவும் மாறுபட்ட இருக்கிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் ஓர் இயற்கையான வழி முறையாகும். பல்வேறு முக மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் முல்தானி மெட்டி பயன்படுகிறது. பெரும்பாலும், பாகிஸ்தான் தளத்தில் காணப்படும் முல்தானி மெட்டியில் தோல் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
முல்தானி மெட்டியில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், சிலிக்கா, டோலமைட் மற்றும் கால்சைட் ஆகியவை உள்ளன. இவை ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. முல்தானி மெட்டி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை முல்தானி மெட்டி சருமத்திலுள்ள எண்ணெயை உறிஞ்சுவதன் மூலம், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது. முகப்பருக்கள் நீங்க வேப்ப இலைகள், முல்தானி மெட்டி, கற்பூரம் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும். கைகள் அல்லது கால்களில் வலியை ஏற்படுத்தக்கூடிய காயங்களுக்கு முல்தானி மெட்டியைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் இதைப் பயன்படுத்துவதன் மூலம், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இயலும்.
முல்தானி மெட்டி ஒரு நல்ல இயற்கை மூலிகை என்பதால் பெரும்பாலும், இது குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும், முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் பயன்பாட்டு முறைகளை அறிவது மிகவும் முக்கியமாகும். முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது சளி மற்றும் இருமலுக்கு வழிவகுக்கிறது. எனவே, உங்களுக்கு சளி இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலும், பெண்கள் ஏராளமான அழகுசாதனப் பொருட்களைத் தோலில் பயன்படுத்துகிறார்கள். மாறாக தோலை பராமரிக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்
Input & Image courtesy:Logintohealth