Kathir News
Begin typing your search above and press return to search.

இனி கியூட், நீட்,ஜே.இ.இ எல்லாவற்றுக்கும் ஒரே தேர்வு - மத்திய அரசின் அதிரடி முடிவு

கியூட் தேர்வை நீட்,ஜே.இ.இ தேர்வுகளுடன் இணைப்பது எப்போது என்பது குறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

இனி கியூட், நீட்,ஜே.இ.இ எல்லாவற்றுக்கும் ஒரே தேர்வு - மத்திய அரசின் அதிரடி முடிவு

KarthigaBy : Karthiga

  |  17 Aug 2022 10:00 AM GMT

க்யூட் தேர்வை நீட்,ஜே.இ.இ தேர்வுகளுடன் இணைப்பது எப்போது என்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளில் சேருவதற்காக கியூட் என்ற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் இத்தேர்வு நடந்தது.

ஆனால் தொழில்நுட்ப குளறுபடிகள் காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில் தேர்வு மையத்திற்கு வந்த பிறகுதேர்வு ரத்தானதை அறிந்து மாணவர்கள் திரும்பி சென்றனர்.

இதன் நான்காம் கட்ட தேர்வு இன்று நடக்கிறது. இதற்கிடையே மருத்துவத்துக்கு நீட்தேர்வு, என்ஜினீயரிங் படிப்புக்கு ஜே.இ.இ மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கியூட் தேர்வு என தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டியிருப்பதால் இந்த தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஜெகதீஷ் குமார் நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கை இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையில் உள்ள மாணவர்களின் சுமையை குறைக்க ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால் அதற்கு நன்கு திட்டமிட வேண்டும் அது ஒரு பெரிய பணியாகவே நாங்கள் அவசரப்படவில்லை. நுழைவுத்தேர்வுகளை இணைப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் வகுக்கப்படவில்லை.

முதலில் இம்மாத இறுதிக்குள் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும்.அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை ஆய்வு செய்யும்.அடுத்த ஆண்டு பொதுவான நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் அதன் பணிச்சுமையை கருதி இப்போதே தயார்படுத்தலை தொடங்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் இடையே கருத்தொற்றுமை ஏற்படவேண்டும். பாடத்திட்டம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பது முக்கியமான பிரச்சினை.

'கியூட்' தேர்வு தொழில்நுட்ப குளறுபடிகளை பொறுத்தவரை இது ஒரு பின்னடைவு அல்ல.ஒரு பாடம் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். அதன் விரிவாக்கத் திட்டங்களுக்கோ, நுழைவுத்தேர்வுகள் இணைப்பு திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News