Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழர்களின் உள்ளத்தை வெல்லும் மோடியின் முயற்சிகளுக்கு வெற்றி எப்போது? கரை சேர்க்க துடிக்கும் மாமல்லபுரம் அலைகள்!!

தமிழர்களின் உள்ளத்தை வெல்லும் மோடியின் முயற்சிகளுக்கு வெற்றி எப்போது? கரை சேர்க்க துடிக்கும் மாமல்லபுரம் அலைகள்!!

தமிழர்களின் உள்ளத்தை வெல்லும் மோடியின் முயற்சிகளுக்கு வெற்றி எப்போது? கரை சேர்க்க துடிக்கும் மாமல்லபுரம் அலைகள்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2019 11:56 AM IST


சினிமா கவர்ச்சி, பேச்சுக் கவர்ச்சி, இலவசக் கவர்ச்சி இவற்றில் மட்டுமே பழகிப்போன தமிழர் சமுதாயத்தை நல்ல நேர்மையான, நேர்மறையான எண்ணங்களுடன் பிரதமர் மோடி நெருங்கி வருகிறார். தேவையற்ற எதிர்ப்புகள், அபாண்டமான பழிகள் இவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு தமிழகத்தின் நலனுக்காக அவர் நெருங்கி வரும் முயற்சிகள் பயனளிக்குமா என்ற கேள்விக்கு சமீபத்தில் நடைபெற்ற மாமல்லபுரம் நிகழ்ச்சிகள் நல்ல சமிக்ஞைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் அரசியல் விமர்சகர் தனது கட்டுரையில் பல விஷயங்களை ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளார்.


பரிதாபமான தனக்கு எதிரான விரோதப் போக்கை நியாயமற்ற முறையில் தமிழகத்தில் பலர் வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் பிரதமர் மோடி ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையை தமிழகத்தை பொறுத்தவரை கடை பிடித்து வருகிறார்.


பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களை நோக்கி தன்னையும் தான் சார்ந்த பாஜக கட்சியையும் நெருங்க வைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், அவ்வாறு செய்ய முயற்சிக்கும்போது, திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மோசமான மாயை அவரது முயற்சிகளை தடுக்கிறது. ஆனாலும் இதிலிருந்து தமிழகத்தை மீட்டு ஒரு தெளிவான பாதையை நோக்கி திருப்ப மிகவும் மாறுபட்ட ஒரு யுக்தியை அவர் பின்பற்றுகிறார். தனக்கு எதிரான அத்தனை எதிர்ப்புகளையும் உள்வாங்கிக் கொண்டு ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையை அவர் கடை பிடிக்கிறார்.


பிரதமருக்கு எதிரான பொய்கள் மற்றும் தவறான தகவல் பிரச்சாரத்தை அடுத்து தமிழகம் இப்போது வரை மோடியை கடுமையாகவே நடத்தி வருகிறது எனக்கூறலாம். இதற்கு காரணம் தமிழக பாஜக மேற்கண்ட தவறான பிரச்சாரங்களை திறம்பட எதிர்கொள்ள இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.


ஜல்லிக்கட்டு போராட்டம் , காவிரிநீர் பங்கீடு, ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரி போராட்டம் இப்படி பல பிரச்சினையிலும் நியாயமற்றவகையில் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மோடியே எதிர் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பாதுகாப்பு துறை தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்க மோடி வந்தபோது திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள், அவரை திரும்பிச் செல்லுமாறு கோரி கோஷம் போட்டு அவமரியாதை செய்தன.


#GobackModi தாக்குதல் அதன்பிறகும் மேலும் சில தடவைகள் தொடர்ந்தன, சென்ற செப்டம்பர் மாதம் 30 ந்தேதி அன்று சென்னை ஐ ஐ டி யில் ஒரு மாநாட்டு விழாவிற்குச் சென்றபோதும் இதை அனுபவித்தார். இந்த நாட்டின் வேறு எந்த பிரதமரும் இத்தகைய அவமானங்களை எதிர் கொண்டதில்லை.


மிக முக்கியமாக, சென்ற மே மாதம் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக தமிழகம் வாக்களித்தது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை சேர்ந்த அகில இந்திய அண்ணா திமுக (அதிமுக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) 39 இடங்களில் ஒரு இடத்தை மட்டுமே வென்றது.


2014 மக்களவைத் தேர்தலிலும், 2016 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் மாநில மக்கள் பாஜகவுக்கு ஒரு கவுரவமான நிலையை அளிக்கவில்லை.


பொதுவாக, தமிழக அரசியல் தலைவர்கள் அரசியலில் பல முறை மக்களால் பல காரணங்களுக்காக புறம் தள்ளப்பட்டிருக்கிரார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் விட கடந்த 2 ஆண்டுகளில் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வந்தபோது நடத்தப்பட்ட விதம் மிகவும் மோசமானது.


உதாரணமாக ஊழல், இலஞ்சம், மின் வெட்டு, ரேஷன் கடைகளில் தரமற்ற பண்டங்கள் விநியோகம், நிர்வாக சீர்கேட்டால் ஏற்படும் மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக தங்களுக்கு இவர்கள் துரோகம் இழைத்ததாக மக்கள் குற்றம் சாட்டும் அரசியல்வாதிகள் பலர் உள்ளனர்.


அத்தகைய சூழலில், மாநிலத்தில் அரசியல் நடத்தப்படும் முறையை பொறுத்தவரை, தமிழகத்திற்கு மோடியின் அணுகுமுறை ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றமாகும். இது அவரைப் பற்றியும் அவரது கட்சியைப் பற்றியும் மக்களின் பார்வையை மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும்.


தமிழகம் தொடர்பாக மோடியின் தனித்துவமான அணுகுமுறையை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகள் உள்ளன. மோடியும் அவரது அரசாங்கமும் தமிழக மக்களை சென்றடைவதற்கான முதல் தெளிவான அறிகுறி மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வந்தது.


தமிழகத்தில் மிகப்பெரும் தோல்வியை பாஜக சந்தித்த நிலையிலும், மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை பார்த்து வருந்தி அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கோதாவரி நதியை காவேரியுடன் இணைக்க மோடி அரசு முன்னுரிமை அளிக்கும் என்று கூறியது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை அறிவித்தார்.


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பிரதமர் மோடி உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் உலகெங்கிலும் மக்கள் இணக்கமாக வாழ வேண்டியதன் அவசியம் குறித்து பேசும்போது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் நூலான புறநானூறில் இருந்து கவிஞர் பூங்குன்றனார் சொன்ன “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற பழ மொழியை மேற்கோள் காட்டிப் பேசினார்.


பிரபஞ்சம் நம் அனைவருக்கும் சொந்தமானது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்ட தமிழ் பாடலை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதையும் அவர் அங்கே குறிப்பிட்டார்.


இந்த குறிப்பை உலகம் முழுவதும் பலர் பாராட்டினர். இது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறுகையில் “ ஆஹா.. தமிழ் இவ்வளவு பழமையான வாழ்க்கைவியல் அம்சங்கள் பொருந்திய மொழியா.. இவ்வளவு நாளாக இந்த மொழியைப் பற்றி தெரியாமல் இருந்ததற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.


சென்ற செப்டம்பர் 30 அன்று, ஐ.ஐ.டி-மெட்ராஸ் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியபோது, “இது உலகின் மிக நீண்டகாலமாக பேசப்படும் பழமையான மொழி வாழும் வீடு” எனக் கூறி தமிழகத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.


பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சீன-இந்திய உச்சிமாநாட்டின் மூலம் உண்மையில் தமிழகத்தை உலகமே உற்று நோக்கியது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இடையில் இருந்த பண்டைய உறவுகளை கோடிட்டுக் காட்டியது. மேலும் தமிழகத்தின் அனைத்து கட்டடக்கலை மற்றும் வரலாற்று சிறப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்லாமல் உலகின் கவனத்தை ஈர்த்தது என்பதால் இது உண்மையில் தமிழகத்துக்கும், இந்திய அரசுக்கும் ஒரு சாதகமான நடவடிக்கையாகும்.


மோடி தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சட்டையுடன் மட்டுமல்லாமல் தோளில் தொங்கும் அங்கவஸ்திரத்துடன் சீன அதிபருடன் நின்றது தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மரியாதை அளித்த செயல் மட்டுமல்ல, தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைந்த நாள் அன்றைய நாள்.


மற்றொரு மறக்க முடியாத நிகழ்ச்சி மகாபலிபுரம் கடற்கரையில் காலையில் வாக்கிங் சென்றபோது அங்கிருந்த குப்பைகளை அகற்றி ஒரு நேர்மறையான வெளிப்பாட்டை காட்டினார். உண்மையில் தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அன்றைய தினம் இதை உற்று நோக்கி பாராட்டினார்கள். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அந்த நிகழ்ச்சி பதிந்தது.


உண்மையில் தமிழர்கள் ஒவ்வொருவர் மனதிலும் இதன் மூலம் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் எந்த அமைச்சரும், முதலமைச்சரும் இதுவரை இதுபோன்ற செயலைச் செய்ய முன்வரவில்லை என சோஷியல் மீடியாவில் பலர் கருத்து தெரிவித்தனர். எதிர் விமர்சகர்கள் சிலர் மோடி குப்பைகளை அகற்றிய நிகழ்ச்சி ஒரு நடிப்பு என்றனர். அதற்கு பதிலடியாக “மோடி நடித்ததாக கூட வைத்துக் கொள்வோம் .. இதே போல ஒவ்வொரு குடி மகனும் நடித்தால் பொது இடங்களில் ஒரு குப்பையை கூட காண முடியாது “ என்று நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் பதிவிட்டனர்.


அதுமட்டுமல்ல எங்கள் தமிழக கடற்கரைகளில் தூய்மை என்பது அதிசயமான ஓன்று . இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த செயல் உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரினாவைப் பெருமைப்படுத்துவதாக நெட்டிசன்கள் பெருமை பட்டனர்..


மோடி சென்னையிலிருந்து புறப்படும் நேரம் வரை அவர் தங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாக பலர் உண்மையில் உணர்ந்தனர். அவர் புறப்படும் சமயத்தில் பிரிவை நினைத்து வருத்தம் அடைந்த பலர் போகாதே மோடி...எங்களை விட்டு போகாதே மோடி என்ற பொருள் படும்படி இலட்சக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் #DontGoBackModi என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து பரப்பினர். மோடியை எதிர்ப்பவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு கசப்பான சம்பவமாகும்.


சமூக ஊடகங்களில் ஒரு சிலர், தமிழகத்திற்கு மோடியின் வருகை திராவிடக் கட்சிகள் தமிழர்களை சுற்றி வளர்த்த பொய்யான மாயையை அம்பலப்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்தனர். மோடியின் நடவடிக்கைகள், பேச்சு நாட்டின் மக்கள் மீதும், குறிப்பாக தமிழ்நாடு மீதும் அவர் கொண்டிருந்த உண்மையான அக்கறையைக் காட்டியது.


மோடியின் அணுகுமுறை எவ்வாறு பலனளிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் எடுத்துக் காட்டும் இரண்டு சம்பவங்கள் இவை.


ஒன்று, சீனப் பிரதமருடனான மாநாட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் அதாவது ஒரு நாள் கழித்து அக்டோபர் 13 ஆம் தேதி 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் மாமல்லபுரத்திற்கு வந்து குவிந்தது மட்டுமல்லாமல் மோடி நின்ற இடம், நடந்த இடம், சீன அதிபருடன் அவர் அளவளாவிய இடம், குறிப்பாக வேட்டி சட்டையுடன் அவர் நின்ற இடம், குப்பை பொறுக்கிய இடம் ஒவ்வொரு இடத்தையும் கண் கொட்டாமல் பார்த்து பெருமை அடைந்தனர். மோடி அப்போது அவர்களுடன் இல்லை தான். அவர் டெல்லி பறந்துவிட்டார். ஆனால் அவர் ஏற்படுத்திய நினைவலைகள் அகலாதவர்களாக பெருமிதத்துடன் திரும்பி சென்றனர்.


இரண்டாவதாக மிக முக்கியமானது என்னவென்றால் மோடி மாமல்லபுரம் வருவதற்கு முன்பு வரை அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் மத்தியில் கூட ஒரு மாற்றம் தெரிகிறது. அவரது விமர்சகர்களில் ஒருவர் உச்சிமாநாட்டை "இது ஒரு நல்ல பார்வை " என்று குறிப்பிட்டார்.


மேலும், சிலர் சமூக ஊடகங்களில், சீன-இந்திய உச்சிமாநாட்டிற்கான இடமாக மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் பலர் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள் . பொதுவாக சொல்லப்போனால் மோடி, மிக மெதுவாக அவரைப் பற்றிய முந்தைய கண்ணோட்டங்களை மாற்றி, தமிழக மக்களை நோக்கி மிக வேகமாக நெருங்கி வருகிறார்.


உண்மையில் குறிப்பிடத்தகுந்த தலைமை இல்லாமல் வெற்றிடமாக உள்ள தமிழகத்தில் இப்போது அவரது தலை தமிழக மக்கள் கண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வடிவத்தில் தெரிகிறது. நிச்சயமாக ஒரு அலை தெரிகிறது. மோடியின் நெருக்கத்தை தமிழக மக்களும் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். தமிழக பாஜகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது எப்போது நடக்கும் என்பது உடனடியாக தெரியாதுதான். ஆனால் நடக்கவே நடக்காது ... நடக்கவும் கூடாது என்று என்று பேசுபவர்களின் எண்ணிக்கை இனி குறையும் என்பது உண்மை.


This is a Translated Article From SWARAJYA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News