Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பக்தவச்சலப் பெருமாள் கோவிலில் 400 ஏக்கர் நிலம் எங்கே? நீதிமன்றத்தில் பரபரப்பான வழக்கு

திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள் கோவிலின் 400 ஏக்கர் நிலத்தில் 205 ஏக்கர் நிலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பக்தவச்சலப் பெருமாள் கோவிலில் 400 ஏக்கர் நிலம் எங்கே? நீதிமன்றத்தில் பரபரப்பான வழக்கு
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 April 2022 5:30 AM GMT

திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள் கோவிலின் 400 ஏக்கர் நிலத்தில் 205 ஏக்கர் நிலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள பொது மனுவில், 'திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை ஊரில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும், இந்த கோவிலுக்கு விஜய ரகுநாத நாயக்கர் 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான செப்புப்பட்டயம் மாயமாகி விட்டது தற்போது 400 ஏக்கரில் மேலும் 7 ஏக்கர் நிலம் மட்டுமே கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே 400 ஏக்கர் நிலத்தை அளந்து எல்லை வரையறை செய்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் மாயமான செப்பு பட்டயத்தை மீட்கவும் உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஈ.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் செப்புப் பட்டயத்தில் குறிப்பிட்ட நிலங்கள் 7 கிராமங்களில் பரவியுள்ளன, அதில் 205 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சில நிலங்கள் அரசின் பயன்பாட்டில் உள்ளன, மேலும் மாயமான பட்டயம் தற்போது அறநிலையத்துறை பாதுகாப்பில் தான் உள்ளது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்கீல் யானை ராஜேந்திரன், 'அறநிலையத்துறை வசம் உள்ளது போலி செப்புபட்டயம் அசல் பட்டயம் அறநிலையத்துறை ஓய்வுபெற்ற ஆணையர் வீட்டில் உள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அந்த செப்புபட்டயம் எங்கு இருந்தது என்பதை விசாரிக்க வேண்டும்' என வாதிட்டார்.

அதனையடுத்து நீதிபதிகள் செப்புப்பட்டயம் குறித்து தொல்லியல் துறை அளித்த விளக்கத்தை மனுதாரரிடம் அறநிலையத்துறை வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை ஜூன் மாதம் இறுதி வாரத்திற்கு தள்ளி வைக்கிறோம் என உத்தரவிட்டனர்.

அப்பொழுது வக்கீல் யானை ராஜேந்திரன், 'கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை முறையாக பாதுகாப்பது இல்லை இதனால் பல ஏக்கர் கோவில் நிலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில் நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை நிர்வகிக்க ஐகோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் இந்த உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என கருத்து தெரிவித்தனர்.

Source - Dailythanthi





Next Story
கதிர் தொகுப்பு
Trending News