காற்றின் மூலம் கொரோனா வைரஸ் ஒருபோதும் பரவாது : WHO கருத்தை உறுதி செய்தது மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனம்.!
காற்றின் மூலம் கொரோனா வைரஸ் ஒருபோதும் பரவாது : WHO கருத்தை உறுதி செய்தது மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனம்.!

உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தன்மை பற்றி பல விதமான தகவல்கள் வருகின்றன. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்த சர்ச்சை இன்னும் நிலவி வருகிறது
இந்நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஒரு ஆய்வின் அறிக்கையில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் சில நாட்களுக்கு ஒரு தகவல்கள் வந்தன.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், காற்றின் மூலம் கொரானா வைரஸ் ஒரு போதும் பரவாது, அதற்கு அந்த தன்மை இல்லை என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் திட்டவட்டமான இந்த கருத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்.) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனத்தின் ஆய்வக இயக்குனர் சேகர் மாண்டே ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவரிடமிருந்து கொரோனா வைரஸ்கள் சில அடி தூரம் காற்றில் பறந்து சென்று கீழே விழும். இதை வைத்து அது காற்றில் மிதக்கும் என்று கூற முடியாது.
காற்றில் பரவும் வைரஸ்கள் என்பது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை. சின்னம்மை, பெரியம்மை, இன்புளூயன்சா போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது. எனவே இது காற்றின் மூலம் பிறருக்கு பரவாது" என்று கூறியுள்ளார்.