Kathir News
Begin typing your search above and press return to search.

வைரல் 'காவி' திருவள்ளுவர் படத்தை உருவாக்கியது யார்? சுவாரஸ்ய தகவல்!

வைரல் 'காவி' திருவள்ளுவர் படத்தை உருவாக்கியது யார்? சுவாரஸ்ய தகவல்!

வைரல் காவி திருவள்ளுவர் படத்தை உருவாக்கியது யார்? சுவாரஸ்ய தகவல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Nov 2019 8:08 AM IST


கடந்த மூன்று நாட்களாக வைரலாகி வரும் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படத்தை வரைந்தது யார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் தெரிய வந்துள்ளது.


இன்று ஆயிரக்கணக்கான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இந்த படம் பதியப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த படத்தை தங்கள் முகப்படமாக(Profile Picture) வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதை உருவாக்கியது யார், எந்த பின்னணியில் என்ற ஆய்வுக்கு சென்றோம்.


ராஜா என்பவர் இந்த படத்தை வரைந்துள்ளார். Modifier Raja என்ற பெயரில் இவர் முகநூலில் இயங்கி வருகிறார். ஏன் இந்த படத்தை உருவாக்கினேன் என்பது குறித்து அவர் தெரிவித்து இருப்பது பின்வருமாறு:


முதலில், நடந்தது என்ன ? அந்த படத்தை ஏன் உருவாக்கினேன் ?


என் நண்பர் @ChandrasekarN ஒரு திருவள்ளுவர் படத்தை எனக்கு அனுப்பி இதில் திருவள்ளுவரை ருத்ராட்சம் திலகம் அணிந்து கம்பீரமான துறவி (முனிவர்) போல வடிவமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார். ( அவருடைய Facebook Profile Picture ஆக பயன்படுத்த)


அதன் அடிப்படையில் தான் நான் இந்த படத்தை வடிவமைத்தேன் .. ஆனால் வடிவமைப்பதற்கு முன் " திருவள்ளுவர் ருத்ராட்சம் திலகங்கள் அணிந்திருப்பது போன்ற புகைப்பட ஆதாரங்கள் தரவுகள் உள்ளதா என் வலைதளங்களில் தேடினேன் "
எனக்கு தெரியும் {வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்த (நீங்கள் கூறிக்கொள்வது போல)} அவர் ஒரு இந்து (சனாதன தர்ம) துறவி என்று , இருந்தாலும் உறுபடுத்திக்கொள்ள தேடினேன் .. பல புத்தகங்களின் அட்டைப் படங்கள் கிடைத்தது , அதன்பிறகு தான் இந்த புகைப்படத்தை வடிவமைத்தேன்‌.


பிறகு காவி நிற உடை ஏன் அணிவித்தேன் ?


(நண்பர் அனுப்பிய படத்தில் உடையில் ஏற்கனவே காவி நிறம் இருந்தது)
துறவிகள் முனிவர்கள் என்றாலே அவர்கள் அணிந்திருப்பது பெரும்பாலும் காவி நிற உடைகளை தான் , ( எனது மானசீக குரு விவேகானந்தர் உட்பட ) வள்ளுவரும் சமண சமயத்தைச் சார்ந்த ஒரு இந்து துறவி என்பதாலும் அவர் முதலாம் தமிழ் சங்கத்தைச் சார்ந்தவர் என்பதாலும் முதல் தமிழ்ச்சங்கத்தின் தலைவன் சிவபெருமான் (ஆதியும் அந்தமுமாய் இருப்பவர்) என்பதாலும்


திருவள்ளுவர் படத்திற்கு காவி நிற உடையும் ருத்ராட்சமும் திருநீற்று பட்டையும் அணிவதில் தவறில்லை என்பதை உணர்ந்து அதன்பிறகு தான் புகைப்படத்தை வடிவமைத்தேன்


இதெல்லாம் நடந்தது 14 அக்டோபர் 2018 அன்று ... அன்று காலை என்னிடம் கேட்டார் , மாலை நேரத்தில் முடித்து கொடுத்துவிட்டு இருவரும் எங்கள் முகநூல் பக்கத்துக்கு Profile Picture ஆக வைத்துக்கொண்டோம்.


அந்த படத்தை தான் பலரும் ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இன்று @BJPTamilnadu பக்கமும் பயன்படுத்தி உள்ளது.




https://www.facebook.com/modifierraja/posts/1449109301918198?xts[0]=68.ARAPz6n9JgbuP7gtkbVLzYMjPXqHcbM1WZI0IJl_oMCiEbljHc8CkUP2tkJwO1qzkNtXi7kMVWhtIdeUsymsVTDC45UosfGY6N0fJNz9W6pD3j9mtWbCeUG4ZcUHn8iH3tclwlL0M0B6hUcSTP0DQcH_f5iAIpjj0FFm0Z1ctGWDhiZbwFZMGFN5Dh1PP0i2ReEDBslFRw3_CZ7VS4U6DBj9Bm4kD2fdJiCTSGocU1-vLgKfO9PXRcxV8-Q1C4Omk6Se34f_nUWnZY1hjOMOGDCEPglaPCjsC6RHUNIC8pGoZLpXNTCUMH2lyfoZ4tRmlhuq2yFtVsltVyQdsRqFJG_QIFT6&tn=-R


இந்த படைப்பின் நிழலில் ராஜா என்ற இவர்து பெயர் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.





ஆக, வைரல் 'காவி' திருவள்ளுவர் படத்திற்கு சொந்தமானவர் ராஜா என்பவர் தான்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News