யார் இந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்?
யார் இந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்?

தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வாழையடியைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னாள் டிஜிபி திரு. L.N. வெங்கடேசன் IPS - முன்னாள் சாத்தான்குளம் M.L.A. திருமதி .ராணி வெங்கடேசன் தம்பதியரின் மகள் ஆவார்
திரு ராஜேஷ் தாஸ்,IPS, கூடுதல் காவல் துறை இயக்குனரின் வாழ்க்கைத் துணைவியும் ஆவார்
இவரின் அம்மா திருமதி. ராணி வெங்கடேசன் அவர்கள் முன்னாள் மத்திய மந்திரி திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் உறவினரும் கூட
. இவர் 1997ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில்தான் இவர் மருத்துவம் படித்தார். மருத்துவம் படித்துவிட்டு அதன்பின் இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
முதல்வரின் தனிப்பிரிவில் பணியாற்றி உள்ளார். செங்கல்பட்டு துணை ஆட்சியாராக இருந்துள்ளார். மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக இருந்துள்ளார்.
கேரளாவில் நிப்பா வந்த நேரத்தில், இவர் தமிழக அரசுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளாராம்.
தமிழக அரசியல்வாதிகள் பலரிடம் இவர் நல்ல மதிப்பெண் வாங்கியவர் என்கிறார்கள். பெரிதாக அரசியல் செய்தது இல்லை. அரசியல் சார்பு இன்றிதான் இவர் செயல்பட்டு இருக்கிறார்.
இதனால் திமுக, அதிமுக என்று யாருக்கும் இவர் பகையாளி கிடையாது. இரண்டு தரப்பும் ஆட்சி செய்த போதும் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து பணிகளை செய்துள்ளார்.
அரசியல் சிக்கல் எதுவும் தன்னுடைய கொரோனா பணிகளை பாதிக்காத வகையில் பீலா ராஜேஷ் செயல்பட்டு வருகிறார்