Kathir News
Begin typing your search above and press return to search.

மராட்டியர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்னதான் நன்மை செய்துவிட்டார்? பா.ஜ.க மீண்டும் மராட்டியக் கோட்டையைப் பிடிக்கபோகும் காரணங்கள் இதுதான்!

மராட்டியர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்னதான் நன்மை செய்துவிட்டார்? பா.ஜ.க மீண்டும் மராட்டியக் கோட்டையைப் பிடிக்கபோகும் காரணங்கள் இதுதான்!

மராட்டியர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்னதான் நன்மை செய்துவிட்டார்? பா.ஜ.க மீண்டும் மராட்டியக் கோட்டையைப் பிடிக்கபோகும் காரணங்கள் இதுதான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Oct 2019 3:38 PM IST


மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் வயது பா.ஜ.க முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் அரசின் சிறந்த செயல்பாடுகளால் கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா பெற்ற நன்மைகள் மற்றும் அதன் மூலம் பட்னாவிஸ் அரசு மக்களின் நம்பிக்கையை எவ்வாறு பெற்றது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.


இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை மாநிலமாகவும், வணிக சாம்ராஜ்யமாகவும் விளங்குவது மகாராஷ்டிர மாநிலம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. தற்போது மாநில முதல்வராகவுள்ள தேவேந்திர பட்னாவிஸ் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென்றும், வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.


அவர் சமீபத்தில் மாநிலம் முழுவதும் "மகா ஜன் ஆதேஷ் யாத்திரை" என்கிற மக்களை சந்திக்கும் யாத்திரையை நிறைவு செய்தார். இது நிச்சயமாக தேவேந்திர பட்னாவிஸை வெகுஜனத் தலைவராக உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். உண்மையில் மகாராஷ்டிர அரசியலில் அரசியலில் என்ன நடைபெறுகிறது என உன்னிப்பாக கவனிக்கும் போது நம் கண்ணுக்கு ஓன்று மட்டும் புலப்படுகிறது. அங்கு நடைபெறும் பந்தயத்தில் ஒரு குதிரை மட்டுமே சமர்த்தாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஒற்றைக் குதிரை மீதே அனைவரும் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த குதிரைதான் தேவேந்திர பட்னாவிஸ். அப்படி என்னதான் செய்து விட்டார் பட்னாவிஸ் மகராஷ்டிரத்துக்கு? தனது ஆளுகையின் கீழ் ஒரு முன் மாதிரி மாகாராஷ்டிராவை அவர் உருவாக்கியுள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.


சட்டம் ஒழுங்கு மற்றும் நவீன முறை பாதுகாப்பு


தற்போதைய முதல்வராக உள்ள பட்னாவிஸ் முதன் முதலாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது அந்த மாநிலம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கெட்ட நிலையில் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கும் இடமாக இருந்தது. ஏராளமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நடை பெற்றன. ஏராளமான இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து மாநில நலன்களுக்கு அச்சுறுத்தும் சக்திகளாக மாறியிருந்தனர். இதற்கு காரணம் மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களை விட தொழில் அளவில் சிறந்த மாநிலம் என்பதால் பயங்கரவாதிகளின் பார்வை எப்போது இந்த மாநிலத்தின் மீதே இருந்தது. இந்த நிலையில் தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்கவும், தொழில் வளர நிலையான அமைதி ஏற்படுத்தவும் பட்னாவிஸ் முன்னுரிமை தந்தார்.


இதற்காக பட்னாவிஸ் அரசாங்கம் செய்த முதல் காரியம் மாநில காவல்துறையின் அடிப்படை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கியது. அவர்களுக்கு ஓய்வூதியம், வீட்டு வசதி, புதுப்பிக்கப்பட்ட காவல் நிலையங்கள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்கள் கிடைத்தன. குற்றங்களைக் கண்டறிவதை மேம்படுத்த தடயவியல் ஆய்வகங்கள் நியமிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் சுமார் ஆயிரம் காவல் நிலையங்கள் ஒன்றுடன் ஓன்று இணைக்கப்பட்டன, இது தரவு மற்றும் தகவல்களை தடையின்றி பகிர்ந்து கொள்வதை உறுதி செய்தது.


மேலும் மும்பை சி.சி.டி.வி திட்டம் மற்றும் அனைத்து குற்றவாளிகளின் கைரேகைகள், புகைப்படங்கள் மற்றும் விழித்திரை ஸ்கேன் ஆகியவற்றை சேமிக்கும் தானியங்கி மல்டி - மாடல் பயோமெட்ரிக் அடையாள அமைப்பு அல்லது ஏ.எம்.பி.ஐ.எஸ். போன்ற மிக நவீனமான குற்றத்தடுப்பு தடவியல் முறைகள் உருவாக்கப்பட்டன. இதனால்தான் பட்னாவிஸ் தலைமையிலான கடந்த 5 ஆண்டு மாநில அரசால் ஜீரோ பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் நக்சல் அச்சுறுத்தலையும் சமாளிக்க முடிந்தது.


பொருளாதாரம் மற்றும் வேலைகள்


மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பொருளாதாரம் அல்லது வேலைவாய்ப்பு உருவாக்கம் எதுவாக இருந்தாலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இதன் வளர்ச்சி அதிகமாகத்தான் உள்ளது. இதற்கு காரணம் தொழில்களுக்கு சாதகமான நிலையை பட்னாவிஸ் உருவாக்கியதன் மூலம் இம்மாநிலத்தின் வளர்ச்சி மிக சிறந்ததாக உள்ளது.


தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பல பழைய காலத்துக்கு பொருந்தாத சட்ட திட்டங்களை அகற்றுவது, புதிய வணிக நிலையங்களை கட்டியெழுப்பும் "ஆப்பிள் சர்க்கார்" போன்ற இணையதளங்களைத் தொடங்குவது போன்ற சீர்திருத்தங்கள் அங்கு புதிய தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்கள் தொடங்குவதில் உள்ள கால விரயம், சுணக்கம் ஆகியவற்றை நீக்கி செயல்திறனை அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் விஷயத்தில் மாநிலம் முதலிடத்தில் இருப்பதால் மகாராஷ்டிராவில் நேரடி முதலீடு மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது.


தரமான நிலக்கரியை பயன்படுத்துதல் மூலம் மின்சார உற்பத்தியை சரியான நிலையில் வைத்திருத்தல், சீரான தங்கு தடையற்ற விநியோகம் தொழில்துறைக்கு பெரிதும் பயனளித்துள்ளது. புதிய தொழில்துறை அலகுகளை அமைப்பதற்கு ஒற்றை சாளர அனுமதி அமைப்பு அமைக்கப்பட்டது, உண்மையில் அது அதிக அளவில் தொழில் முனைவோருக்கும், அரசுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. பெரிய அளவில் வேலையை உருவாக்கும் ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ் துறைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.


பண்ணைகள் மற்றும் விவசாயிகள்


மாநிலம் பொருளாதார அடிப்படையில் பல சிறப்புகளை உடைய மாநிலமாக இருந்தாலும் இங்கு பலரும் உணராமல் இருந்தது கடும் வறட்சியால் அடிக்கடி பாதிக்கப்படும் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளாகும். நீண்டகாலமாக அந்த பகுதிகள் தனி கவனம் பெறப்படாமல் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே இருந்தன. அவர்களுக்காக அரசு ஏதாவது விரைவாக செய்ய வேண்டியிருந்தது.


முதல் நடவடிக்கை பண்ணைகளுக்கான கிராமப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும். நீர்ப்பாசனத்திற்கு நீர் வழங்குவதற்காக சிறிய குளங்களை உருவாக்க முதல்வரே ‘ஜல் யுக்த் ஷிவிர்’ திட்டத்தை தொடங்கினார். இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக விவசாய விளைபொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்கள் கமிஷன் அதிக அளவில் இருந்தது. இவற்றை அகற்றி அரசு சரியான வழி காட்டியதால் விவசாயிகளின் லாபம் உயர்ந்தது. ஏபிஎம்சி என அழைக்கப்பட்ட பழைய வேளாண் விலை பொருட்கள் விற்பனைக் குழுவின் பழைய கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. இதனால் விவசாயி தனது விளை பொருளுக்கான தேவையையும், தேவைக்கான இருப்பிடத்தையும், அதன் விலையையும் தேர்ந்தெடுத்து தங்களது விளை பொருள்களை விற்கும் நிலை உருவாகியுள்ளது.


மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் மற்றும் பண்ணைகளுக்கு அத்தியாவசியமான உரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை நன்றாக அனுபவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் மின்சார மோட்டார் பாம்புகள் மற்றும் சோலார் பம்புகளையும் மானிய முறைகளில் பெறுகின்றனர்.


இது தவிர, விவசாயிகள் தங்கள் விலை பொருள்களை சேமிக்க மாநிலம் முழுவதும் குளிர் சேமிப்பு கிடங்கு வசதிக்கான நெட்வொர்க்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, சாலை உள்கட்டமைப்பு சந்தை அணுகலை அளிக்கிறது. மண் சுகாதார அட்டைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைத்து வருகிறது. விவசாயிகளின் கைகளில் நல்ல தரமான கருவிகளை அரசு நிலையங்கள் வழங்குகின்றன. அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பெரிய முன்னேற்றத்துக்கான திட்டங்களை எடுத்துள்ளது. அணை நீர் மேலாண்மை இப்போது தொழில் ரீதியாக இயங்குவதால் நகரங்களுக்கான தண்ணீர் சப்ளை வாட்டர் டேங்கர்கள் மூலம் எல்லா இருப்பிடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்படுகின்றன. இப்போது நீர்ப்பாசன திட்டங்களில் மோசடிகள் எதுவுமில்லை. சிறந்த எதிர்காலத்தை நோக்கி தங்கள் மாநிலம் பீடு நடை போடுவதாக மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர்.


மக்கள் மைய அரசு


எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையே எப்போதும் குறுக்கீடுகள் இல்லாத எளிமையான ஒரு நேரடித்தொடர்பு இருக்க வேண்டும். அரசின் எளிமையானத் தொடர்புகளால் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். இந்த தொடர்பு முறை ஒரு நிகழ்ச்சி நிரல் போல இருக்க வேண்டும் என்பதற்காக பட்னாவிஸ் அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து சிறப்பு கவனம் செலுத்தியது. இதன் அடிப்படையில் "ஆப்பிள் சர்க்கார்" திட்டம் செயல்படுத்தப்பட்டு பொது மக்கள் தினமும் தங்கள் கோரிக்கைக்காக நாள் கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைவது தவிர்க்கப்பட்டது. கஷ்டங்கள் நீக்கப்பட்டன. தாமதமில்லாமல் வேலைகள் நடைபெற்றதால் மக்கள் சரியான நேரத்தில் பலன்கள் அடையும் நிலைகள் உருவாகின. இதற்காக கொள்கை மட்டத்தில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு மறுசீரமைக்கப்பட்டன.


"ஆப்பிள் சர்க்கார்" என்ற இணையதள முறை மூலம் 39 அரசு துறைகளில் 400 சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. இது குடிமக்களுக்கு நேரம், செலவு மற்றும் மிக முக்கியமாக தினமும் அலைச்சல் மற்றும் லஞ்சம், ஊழலை வெகுவாக குறைத்தது. மேலும் அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக அனைத்து அரசு அலுவலகங்களின் பணிகளும் இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நிலப் பதிவு போன்ற பொருத்தமான தகவல்களையும் ஆவணங்களையும் இணையம் மூலமாகவும் இலவசமாகவும் மக்கள் பெற்று வருகின்றனர்.


மகாராஷ்டிரா எப்போதும் நகரங்கள் அதிகமுள்ள நகர்ப்புற மாநிலமாக இருந்து வருகிறது. அரசாங்கம் 10 புதிய ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணித்து வருகிறது, இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள நகரங்களில் மக்கள் சுலபமாக அடிப்படை வசதிகளை பெறுவதுடன் சூழலுக்கேற்ற நல்வாழ்க்கையும் வாழ்கின்றனர். எஃப்எஸ்ஐ கொள்கை மூலம் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகள் கட்டப்படுகின்றன. இந்த நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு மிக அருகில் உள்ளன.


மேலும் மும்பை - ஜல்கான் - நாக்பூர் - நாந்தேட் - சோலாப்பூர் - கோலாப்பூர் - ரத்னகிரி மற்றும் புனே போன்ற முக்கியமான நகரங்கள் முன்பு சரியான முறையில் இணைப்பை பெற்றிருக்கவில்லை. ஆனால் இப்போது சாலை இணைப்பு மிக நன்றாக உள்ளது. ஒரு சிறந்த நம்பகமான பொது போக்குவரத்து அமைப்பு இங்கு கட்டப்பட்டுள்ளதால் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.


முடிவுரை


கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு, பெண்கள் அதிகாரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் அரசாங்கம் பெருமளவில் கவனம் செலுத்தியுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையங்களில் அரசு முதலீடு செய்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலை செய்யும் பெண்களுக்கு, விடுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பல விடுதிகள் அரசு சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இது மற்ற மாநிலங்களிலிருந்தும் வரும் பெண்களுக்கு பாதுகாப்பையும், பயனையும் பரந்த அளவில் அளிக்கிறது. பட்னாவிஸ் அரசாங்கத்தின் கொள்கைகளால் சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளும் பயனடைந்துள்ளன. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பிராந்தியமும், அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் அரசின் ஒவ்வொரு நேர்மையான முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் கண்டிருக்கிறார்கள்.


வரவிருக்கும் தேர்தல்கள் ஒற்றை குதிரை பந்தயம் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றியாளராக வெளிப்படுவார் என்றும் சொல்வதற்கான ஒரே காரணம் இதுதான்.


This is a translated article written by Ashutosh Muglikar for OpIndia.Com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News