Kathir News
Begin typing your search above and press return to search.

கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட இதுதான் காரணமா?

கும்பாபிஷேகத்தின்போது கோவில் மேல் கருடன் வட்டமிட காரணம் என்ன?

கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட இதுதான் காரணமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Jan 2022 12:30 AM GMT

கும்பாபிஷேகம் என்பது தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் அதிகம் நடைபெறுகிறது. சிவன், அம்மன், விநாயகர் முருகர் முதலிய சிவாலய சம்பந்தப்பட்ட அதிகமாக இருந்தால் அந்த ஆலயங்களில் சிவாகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறும். வைணவ ஆலயமாக இருந்தால் அவை வைகானச, பாஞ்சராத்ர ஆகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இப்படி நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது கருடாழ்வார் என்று அழைக்கப்படும் கருடர் வட்டம் இடுவதற்கு காரணங்கள் என்ன? என்பது இரண்டு விதமாகக் கூறப்படுகிறது.


பொதுவாக கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று இரண்டு விதமாக நாம் பிரிக்கலாம். அவரவர் கருத்துப்படி, அவர்களில் நம்பியிருக்கும் கொள்கைகளும் வேறு படுவதைப் பொறுத்து அது கடவுள் நம்பிக்கை அல்லது வெறும் மூட நம்பிக்கை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக, கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், விஷ்ணுவின் அம்சம் கருடன். கருட தரிசனம் பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள். கருடனைத் தரிசிக்கும்போது நம்முடைய மனம் நிறைவடைகிறது. நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தாலும் அந்த நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா? என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்கள். அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம்? என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.


இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவே தான் கருட தரிசனத்திற்கு பிறகே கும்பாபிஷேகம் முழுமையாக நடத்தி மகிழ்கின்றனர். ஆனால் இதில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை ஒரு மூட பழக்கம் என்று நம்புவார்கள். இதை ஒரு வேடிக்கையாக செயலாகவும் பார்க்கிறார்கள். ஒரு விவாதப் பொருளாக எடுத்து வருகிறார்கள். மக்கள் அதிகமாக கூட்டமாக இருக்கும் இடங்களில் கருடன் பறப்பது சாதாரண விஷயமாக இருக்கலாம் என்று அவர்கள் வாதாடுவார்கள். எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை மனிதர்களுக்கு மீறிய ஏதோ ஒரு சக்தி மனிதர்களை நல்ல முறையில் வழி நடத்துகின்றது? என்பதை நாம் உணரும் பொழுது தவறு செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை.

Input & Image courtesy: Twitter Post




Next Story
கதிர் தொகுப்பு
Trending News