போதிய தூக்கம் அவசியமா? எதற்கு இது முக்கியமான விஷயம்!
Important benefits of 6-8 hours sleeping.
By : Bharathi Latha
ஒவ்வொருவரும் தற்போது உள்ள சூழ்நிலையில் செல்போன், லேப்டாப் போன்ற நவீன சாதனங்களுக்கு அடிமையாக்கி தங்களுடைய நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்த பிரச்சினையால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லலாம். தற்போது நடத்திய ஒரு சர்வே முடிவின்படி சுமார் 53% இளைஞர்கள் இரவு நேரங்களில் ஆன்லைனில் இருப்பதாக முடிவு கூறுகிறது. இதனால் அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுமா? என்று கேட்டால் நிச்சயம் பாதிக்கப்படும்.
ஆம், பாதிக்கப்படும். குறிப்பாக அவர்களுடைய தூக்கத்திற்கு உதவும் ஹார்மோன்கள் பாதிப்படையும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 6-9 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா? போதுமான தூக்கம் கிடைக்காததால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம். நினைவாற்றல் குறையும், செயல்பாடுகளில் கவனமின்மை ஏற்படும், மூளை செயல்பாட்டில் எதிர்மறை விளைவு உண்டாகும், மனம் நிலையாக இருக்காது, நோயெதிர்ப்பாற்றல் குறையும், இரத்த அழுத்தம் சீரற்றதாகும், உடல் எடைக்கூடும், இதய நோய்கள் ஏற்படும்.
நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு, உடல்நல குறைபாடு, கவனச் சிதறல், குறிப்பாக நாம் ஒரு வேலையை செய்யும் பொழுது அவற்றை முழுவதுமாக செய்வதற்கு மனம் ஒத்துழைக்காது. மேலும் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. இன்னும் இது போன்ற பல சிக்கல்கள் தூக்கமின்மையால் ஏற்படும் என்பதால் தினமும் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் வரை கட்டாயம் உறங்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
Image courtesy: wikipedia, economic times