Kathir News
Begin typing your search above and press return to search.

"ஈ.வெ.ராமசாமியை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை? - சட்டசபையில் கொந்தளித்த கருணாநிதி!

ஈ.வெ.ராமசாமியை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை? - சட்டசபையில் கொந்தளித்த கருணாநிதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Sep 2021 10:24 AM GMT


பத்திரிகைகள் மீது பாயும் சட்டம்


எழுதினால், பேசினால் முரசொலி, மாலை மணி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன் அதை படித்த பிறகு அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது.


தலைப்பு "கம்யூனிஸ்டுகளும் நானும்" என்பதாகும்.


"நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன். இத்தனைக்கும் நான் ஒன்பது மாற்று கம்யூனிச காரனுமல்ல" - இத்தனையும் நான் எழுதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்லது பாலைவன கோட்டைக்கு அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அத்தனை பேர்களையும் கண்காணா தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.


எழுதியது யார்?


"நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்." என்று எழுதியவர் - எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிறது.


இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றன


பெரியார் ஈவேரா அவர்கள் 5.2 .1966 "விடுதலை" பத்திரிக்கையில் இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறார்.

இதற்கு எதிர்வினையாற்றினார் மு.கருணாநிதி.


"பாதுகாப்பு சட்டம் எங்கே போயிற்று? பாதுகாப்பு சட்டம் பெரியார் என்ற பெயரை கண்டவுடனே மழுங்கி விட்டதா?


அவர் காலடியில் மண்டியிட்டு விட்டதா? தேர்தலில் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை. கேவலம் ஒரு சில வோட்டுக்களுக்காக இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் போய்விட்டார்களே என்று கவலையாக உள்ளது"

என்று 11-03-1966 அன்று கருணாநிதி தமிழக சட்டசபையில் கொந்தளித்தார்.


(குறிப்பு: கலைஞரின் சட்டமன்ற உரைகள் புத்தகத்தில், 3-ஆம் பாகம், பக்கம் எண் 57-இல்)


இதுதான் தி.மு.க...


இதுதான் கருணாநிதி...!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News