இந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது முக்கியமா?
இந்துக் கோயில்களை அரச கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது முக்கியமா? காரணம் என்ன?
By : Bharathi Latha
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த வாரம் இந்து கோவில்களை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்தவகையில் இந்துக்கள் கோவில் குறித்து, புதிய சட்டத்தை கொண்டு வருவதாகவும் அவர்களுடைய அரசு கூறியிருந்தது. அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட இந்து கோவில்களில் அந்த கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இதன் முடிவாகும். கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு உரிமையை மீண்டும் அவர்களுக்கு கொடுக்கப்படுவதும் இதிலுள்ள சிறப்பம்சம். இதன் மூலம் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும்.
தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதல் முறையாக கர்நாடகாவில் இந்த மாதிரியான சட்டம் வர இருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். இந்து நாகரீக மறுமலர்ச்சிக்கு உதவியாக இருக்கும் பல்வேறு கட்சிகளையம் இந்த ஒரு முடிவை புறக்கணித்த ஒரு சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய தலைமையிலான அரசு, அமைந்து அதன் மூலம் மாநிலத்தின் தனித்து செயல்படும் திறன் மற்றும் மறுமலர்ச்சி மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்து கோயில்கள் பல்வேறு முகலாய மன்னர்களின் ஆட்சியின் கீழும் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சியிலும் பல்வேறு சட்டங்களை எதிர்கொண்டு உள்ளது. ஆனால் இனிமேல் இந்த மாதிரியான சட்டம் கோவில்களை இதில் இருந்து விடுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கோவில்கள் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, இது அமைந்துள்ளது. எனவே இந்த சட்டம் இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
Input & Image courtesy: News 18