தைரியம் இருக்கா.? காஷ்மீர் முஸ்லிம்கள் பற்றி மட்டும் கவலைப்படும் இம்ரான் கான், சீனாவில் முஸ்லிம்களுக்கு அரங்கேறும் கொடுமை குறித்து வாய் திறப்பாரா?
தைரியம் இருக்கா.? காஷ்மீர் முஸ்லிம்கள் பற்றி மட்டும் கவலைப்படும் இம்ரான் கான், சீனாவில் முஸ்லிம்களுக்கு அரங்கேறும் கொடுமை குறித்து வாய் திறப்பாரா?
By : Kathir Webdesk
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாக கூறும் பாகிஸ்தான், ஏன் சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவில் உள்ள உய்குர்கள் மற்றும் சீனாவில் துருக்கிய மொழி பேசும் பிற முஸ்லிம்கள் மீதாது மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள் குறித்து பேசாமல் மௌனம் காப்பது ஏன்? என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.
மேலும், காஷ்மீர் பற்றி மட்டுமே பேசும் இம்ரான் கான், சீனாவில் முஸ்லீம் சமூகத்தினருக்கு ஏற்படும் கொடூரமான நிலைமைகள் குறித்து பேசவில்லை என்று விமர்சித்துள்ளார்.
சீனா அனைத்து வகையிலும் பாகிஸ்தானின் நட்பு நாடாக உள்ளது. சீனா தனது பொருளாதார தேவைக்காக பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கி, அந்நாட்டை பணத்தால் கட்டிப்போட்டுள்ளது. அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் சீனாவுடன் இணக்கமாகி இருப்பதால், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, சீனாவில் 22 முதல் 23 மில்லியன் வரையிலான முஸ்லிம்கள் உள்ளனர். இந்தியாவை போல 1.4 பில்லியன் கொண்ட நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களில், ஹுய் மற்றும் உய்குர்கள் இனக்குழு மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். உய்குர்கள் இனமக்கள் சீனாவில் சின்ஜியாங்கில் பகுதியில் வாழ்கின்றனர். ஆனால் ஹுய் இன மக்கள் நாடு முழுவதும் சிதறி காணப்படுகின்றனர்.
உய்குர் இன முஸ்லிம் மக்களிடம் தவறாக நடந்து கொண்டதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் ஜின்ஜியாங்கில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர், இதற்கு இஸ்லாமியவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் மீது பெய்ஜிங் குற்றம் சாட்டியது. இப்படி பல வகைகளில் முஸ்லின் மக்கள் சீனாவில் கொடுமை அனுபவித்து வரும் நிலையில், இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தை மட்டும் ஏன் கையில் எடுக்கிறார் என்று அமெரிக்காவே கேள்விஎழுப்பியுள்ளது.