Kathir News
Begin typing your search above and press return to search.

ஒடுக்கப்படும் இந்திய மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை தருவது இந்திய குடியரசின் கடமை

ஒடுக்கப்படும் இந்திய மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை தருவது இந்திய குடியரசின் கடமை

ஒடுக்கப்படும் இந்திய மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை  தருவது இந்திய குடியரசின் கடமை
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Oct 2019 11:29 AM IST


முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் திரு நாகேஸஷ்வர ராவ் அவுட்லுக் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதியதின் தமிழாக்கம் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 11A ஷரத்தை புகுத்தி குடியுரிமை சட்டத்தில் இந்து, ஜைன, சீக்கிய, பௌத்த மற்றும் சரோஸ்ட்ரிய மதத்தினருக்கு குடியுரிமையில் முன்னுரிமை தரும்படி மாற்றம் கொண்டு வர வேண்டும்.


நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் வாசகமே ‘India, that is Bharat’ என்று உள்ளது.


இதன் அர்த்தமே 'இந்தியாவென அழைக்கப்படும் பாரதம்' என்பதாகும். இந்த வாசகம் நுட்பமான உட்பொருட்களை உள்ளடக்கியது.



  1. இந்தியா என்ற பெயர்க் கொண்ட நாடு பாரதம் என்ற புராதனமான நாட்டின் புதுப் பெயர் ஆகும். இந்த புராதனமான பாரத நாடு பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வரும் ஒரு தொன்மையான நாகரீகத்தின் தாய்வீடாகும் . இந்த நாகரிகத்தின் தொன்றுதொட்டு வரும் ஆன்மிகத் தேடலின் வெளிப்பாடாக இந்து, ஜைனம் , பௌத்தம் மற்றும் சீக்கியம் எனும் ஆன்மிக மார்க்கங்கள் பிறந்தன.
  2. இந்திய அரசு, அதாவது இந்த நாட்டில் இயங்கி வரும் சட்டம் இயற்றக்கூடிய பாராளுமன்றம், ஆட்சி செய்யக் கூடிய சர்கார் மற்றும் நீதித்துறை அனைத்தும் இந்த நாகரிகத்தின் மெய்க்காவலர்களாக செயல்படவேண்டிய பொறுப்புடைய அமைப்புகளாகும்.
  3. அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் 'தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்ற வாசகத்துக்கு ஒரு சிறப்பு அர்த்தமும் உள்ளது. நமது தேசத்தின் ஆணிவேர் ஒரு நாகரிக சமுதாய கோட்பாடு. இக்கோட்பாடு நமது தேசத்தை இழைபோல் பல யுகங்களாக நம்மை இடம், காலம், தலைமுறைகள் தாண்டி ஒற்றுமையாக இணைத்து வருகிறதுÂ


நம் அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய சான்றோர்கள் இச்சட்டத்தை இயற்ற அவர்கள் கூடுவதற்கு பல யுகங்கள் முன்பே இந்த துணைக்கண்டம் சனாதன தர்மத்தின் நாகரிகத்தின் அடிப்படையில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கொண்ட ஒரு தேசமாக வார்த்து எடுக்கப்பட்டதை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.Â


இப்படி இருக்க அவர்கள் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்திற்கு இந்த தொன்மையான நாகரிகத்தையும் அதன் அடிப்படை கூறுகளையும் காப்பாற்ற ஒரு தார்மிக கடமை இருப்பது அவர்கள் நன்று அறிந்த ஒன்று தான். ஒரு தேசத்தின் சட்ட திட்டங்கள் அத்தேசத்தின் ஒருமைப்பாட்டையும் அம்மக்களின் ஒற்றுமையையும் காப்பாற்றும் வகையில் அமைக்கப்பட வேண்டும். வெறும் நிலக்கூறுகள் ஒரு தேசமாவதற்கு வாய்ப்பில்லை. நாகரிகமும் அதன் அடிப்படை கூறுகளும் அன்றி இந்தியா என்ற ஒரு தேசமே கிடையாது.


இவ்வுலகத்தில் நூறு கோடி இந்துக்கள் உள்ளனரே தவிர இந்துக்களுக்கு என்று எந்த ஒரு நாடும் இல்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் இந்தியா மற்றும் நேபாளம் மட்டுமே.


இப்படி இருக்கையில் இந்திய குடியரசுக்கு உலகத்தில் எங்கு வாழ்பவராயினும் இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் பாதுக்காப்பில் ஒரு தனி பொறுப்பு உள்ளது. பௌத்தர்களுக்கு மற்ற நாடுகள் இருப்பினும் அம்மதத்தின் பிறப்படமான இந்தியாவில் அம்மக்களுக்கு ஒரு இடம் இருக்க வேண்டும்.


வெவ்வேறு நாடுகளில் இதற்கு முன்பும் இப்போதும் இந்துக்கள் பல இன்னல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளனர். சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தின் 25 வது ஷரத்தின் 2 வது பிரிவின் அடிப்படையில் இந்துக்களில் சேர்வர். மத அடிப்படையில் ஒடுக்குமுறைகளும் கொடுமைகளும் அனுபவித்த இந்துக்கள் இடம் பெயர்ந்து பல வருடங்களாகியும் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.


TRIPS ஒப்பந்தத்தின் அடிப்படையில் Geographical Indications of Goods (Registration and Protection) Act, 1999 என்ற சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியது. வெறும் உயிரற்ற பொருட்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அளிக்கும்போது நம் கலாச்சாரத்தின் வாரிசுகளாகிய மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் தார்மீக பொறுப்பின் அடிப்படையில் எங்கு வாழ்ந்தாலும் இந்துக்களின் நல்வாழ்வு நம் நாட்டின் பொறுப்பாகும். 2014 பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் - 'ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு இந்தியாவே ஒரு இயற்கையான தாய்நாடு. அவர்களுக்கு இங்கு தஞ்சம் புக எப்போதும் உரிமையுண்டு ' என்று வாக்குறுதி அளித்தது. அவ்வாக்குறுதியின்படி 2016 ஆம் வருடம் Citizenship Amendment Bill, 2016 (CAB-2016) சட்ட மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகமானது. பிற்காலங்களில் பல்வேறு காரணங்களால் அது காலாவதியாகிவிட்டது. இப்போது தேசிய மக்கள் தொகை பதிவு (NRC) அஸ்ஸாம் மாநிலத்தில் பலரின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கிவிட்டது .


இந்நேரத்தில் 2016 மசோதாவின் குறைபாடுகளை அலசி ஆராய்வது அவசியம். அப்படி ஆராய்ந்தோமானால் நமக்கு புலப்படும் சில உண்மைகள் இவ்வாறு உள்ளன



  1. CAB 2016 மசோதா பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே வாழும் இந்துக்களின் நிலையை மனதில் கொண்டே இயற்றப்பட்டது -. ஆனால் அமெரிக்க இந்து அமைப்பு கூறுவது - Hindu American students continue to be bullied and feel socially ostracized for their religious beliefஸ். பிற்காலத்தை மனதில் கொண்டு நாம் இந்த எல்லையை சற்றே விரிவுபடுத்தி அனைத்து நாடுகளிலும் வாழும் இந்துக்களையும் உள்ளடக்கிய சட்டம் இயற்ற வேண்டும்
  2. 2016 மசோதா அம்மூன்று நாடுகளில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் உள்ளடக்கியது. இதில் அடிப்படை முரண்பாடு என்னவென்றால் நம் இந்திய தேசத்துக்கு வெளியே தோன்றிய மதங்களில் எந்த பொறுப்பும் இல்லை. முற்காலங்களில் யூதர்கள் மற்றும் பாரசீக சொரோஸ்டரிய மதத்தினரிடம் நாம் பெருந்தன்மையாக நடந்து கொண்டு தஞ்சம் அளித்துள்ளோம். இஸ்ரேல் நாட்டின் அமைப்பிற்கு பிறகு யூதர்களுக்கு இந்த சலுகை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் நாடுகளில் தஞ்சம் ஏற்று கொள்ளலாம். அதிக மக்கள் தொகையினால் பொருளாதார நெருக்கடிகளை பல காலமாக சந்தித்துவரும் நாம் இதற்கு மேலும் அகதிகளை ஏற்று மேலும் நெருக்கடியை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்வதில் எந்த பயனும் இல்லை. நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த மக்கள் தொகை பிரச்சினையை தன் சுதந்திர தின உரையில் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
  3. 2016 மசோதாவின் ஷரத்துக்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்புடையதா என்பதே ஒரு கேள்விக்குறியாகி இருக்கிறது. அது பாராளுமன்றத்தால் இயற்றப்படும் முன்பே நீதிமன்றத்தில் நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் இந்த மசோதா தேக்கமடைந்தால் பல ஒடுக்கப்பட்ட இந்துக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகையால், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றிய பின்பே இந்த மசோதாவை கொண்டு வர வேண்டும்.
  4. மத அடிப்படைவாதத்தினால் ஏற்படும் ஒடுக்குமுறையே தஞ்சம் பெறுவோருக்கு குடியுரிமை அளிக்கப்படும் காரணி. இதில் ஒடுக்குமுறையை காரணமாக அறிவித்து ஒரு நபர் குடியுரிமை பெற்றபின் இந்திய தாய் மதம் அல்லாத மதத்துக்கு மாறுவாராயின் அந்நபருக்கு வழங்கிய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். மதம் மாறும் பட்சத்தில் அந்நபர் எங்கு பிறந்தாரோ, அங்கேயே மதம் மாறி தங்கி இருக்கலாம். பொய்யான சான்றின் அடிப்படையில் பெறப்படும் குடியுரிமைக்கு எதிராக 2016 மசோதாவில் எந்த சட்டப் பிரிவும் இல்லை. அப்படிப்பட்ட சட்டப் பிரிவும் இல்லையென்றால், ஒரு புலம்பெயர்வோர் படையெடுப்பை சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்.
  5. பொய்யான சான்றுகளை சமர்பித்து ஏமாற்றி குடியுரிமை பெறும் நபர்களை Enemy Property Act - இன் கீழ் நாடு கடத்தவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் ஷரத்துக்கள் வேண்டும்.


இவ்வனைத்தையும் மனதில் கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் 11A என்ற ஷரத்தை இயற்றி அதன் மூலமாக குடியுரிமை சட்டத்தை மாற்றி அமைத்து ஒடுக்கப்படும் இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் சீக்கியர்கள் மற்றும் பார்ஸிகளுக்கும் குடியுரிமை துரிதமாக கொடுக்கும் வழியை கொண்டு வந்து அதன் துஷ்ப்ரயோகத்தை தடுக்கும் வழியையும் ஏற்படுத்தலாம்.


திரு நாகேஸ்வர ராவ் தற்போது உயர் பொறுப்பில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரி. அவர் 2019 ஆண்டில் CBIயின் தற்காலிக இயக்குனராக பணியாற்றி உள்ளார்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News