விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரை ஏன் அனுமதிக்கவில்லை - காவல்துறைக்கு நீதிமன்றம் கேடு
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வாகன யாத்திரைக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : Mohan Raj
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வாகன யாத்திரைக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் இணை செயலாளர் பாரத் உயர்நீதிமன்ற கிளைகள் தாக்கல் செய்த மனுவில் தமிழக மக்கள் மத்தியில் விரதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வாகன யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகன யாத்திரை திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கி தென் மாவட்டங்களுக்கு சென்று திருச்சி விராலிமலையில் ஜனவரி 17ஆம் தேதி நிறைவடைகிறது யாத்திரை வாகனத்தில் முருகன் சிலையும், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் துறவியும் இருப்பார்கள்.
யாத்திரைக்கு அனுமதி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் யாத்திரை செல்லும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் வி.ஹெச்.பி வாகன யாத்திரைக்கு அனுமதி மறுப்பு தொடர்பாக மனு ஒன்று நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது, யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆ.என்.மஞ்சுளா பார்வையில் விசாரணைக்கு வந்த பொழுது மேலும் அவர் காவல்துறை இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி இரண்டாம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்தார்.