Kathir News
Begin typing your search above and press return to search.

ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் - கண்டுகொள்ளுமா தி.மு.க அரசு?

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பற்றி தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் பேசினர் .

ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் - கண்டுகொள்ளுமா தி.மு.க அரசு?
X

KarthigaBy : Karthiga

  |  22 Aug 2022 4:45 AM GMT

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகைதரும் முதல்வர் ஸ்டாலின் 'ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பி.ஏ.பி பாதுகாப்பு இயக்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

அனைத்து விவசாய அமைப்புகளையும் உள்ளடக்கிய பி.ஏ.பி பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருப்பூரில் கோரிக்கை, பேரணி நேற்று நடந்தது. ஒட்டன்சத்திரத்துக்கு ஆழியாறில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக விவசாய அமைப்பினர் பேசியதாவது.பி.ஏ.பி பாசனத் திட்டத்தை காப்பாற்ற வேண்டும் எனில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தற்போது 8 டி.எம்.சி அளவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்வததே இல்லை. வழக்கமாக 9 சுற்றுகள் திறக்கப்படும் தண்ணீர் தற்போது 4 சுற்றுகளாக குறைந்துள்ளது.காண்டடூர் கால்வாய், திருமூர்த்தி அணைக்கால்வாயும் சேதம் அடைந்துள்ளன.

பி.ஏ.பி திட்டத்தில் இருந்து தண்ணீர் பெற உரிமை பெற்ற உப்பாறு அணை, வட்டமலைக்கரை ஓடை அணைகளுக்கு 22 ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்கவில்லை.அபரிமிதமான மழையால் கடந்தாண்டு தண்ணீர் கிடைத்துள்ளது. பி.ஏ.பி திட்டம் மேம்பட வேண்டுமெனில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

கோவை திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதிக்கும் மாற்று திட்டம் அறிவிக்க வேண்டும் இவ்வாறு விவசாயிகள் பேசினர் .


Source-Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News