Kathir News
Begin typing your search above and press return to search.

குடிநீர் விற்பனையில் தமிழக அரசு ஈடுபடுவதா? அண்ணாமலை கேள்வி!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

குடிநீர் விற்பனையில் தமிழக அரசு ஈடுபடுவதா? அண்ணாமலை கேள்வி!
X

KarthigaBy : Karthiga

  |  23 May 2023 1:01 AM GMT

ஆவின் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014- 2015 ஆம் ஆண்டு குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவித்தபோது அதனை இலவசமாக வழங்க வேண்டும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலின் தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருப்பது தி.மு.கவினர் பலன் பெறுவதற்காகவோ என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும்போது மக்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போதும் அதற்கு தீர்வு காணாமல் குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபட போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம் ?உடனடியாக அனைத்து மக்களுக்கும் சரியான சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் , தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு புதிய புதிய திட்டங்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News