'வந்தே பாரத்' ரயிலில் இந்த ஒரு கூடுதல் வசதியும் விரைவில் அறிமுகமா? ட்விஸ்ட் வைக்கும் ரயில்வே!
வந்தே பாரத் ரயிலில் விரைவிலேயே படுக்கை வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
By : Karthiga
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி- வாரணாசி இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிவேக பயணம், குளிர்சாதன வசதி , நேரம் மிச்சமாவதால் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் இல் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிதாக 5 வந்தே பாரத் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் போபால் - ஜபல்பூர் கஜுராஹோ - போபால் ,இந்தூர் - கோவா ,மும்பை - ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட் - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் ரயில் சேவை தொடங்கப்பட்டது .
இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் 24 மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் 24 மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
'வந்தே பாரத்' ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து. வருகிறது ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 27- ஆம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் ஐந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதன்மூலம் வந்தே பாரத் ரயில்கள் 24 மாநிலங்களை இணைத்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி வரையில் இயக்கப்பட்ட 2140 ட்ரிப்புகளில் மொத்தம் 27 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர் . படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன .இவ்வாறு அவர்கள் கூறினர்.