குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பு
குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பு
By : Kathir Webdesk
குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இது 2019 ஆண்டின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது மாநிலங்களவையின் 250 வது நாடாளுமன்ற கூட்டத்தொடர். இந்த அமர்வின் போது, 26 ஆம் தேதி, அரசியலமைப்பு தினத்தை அதுவும் இந்த ஆண்டு 70வது அரசியலமைப்பு தினத்தை கடைப் பிடிக்கப் போகிறோம்,
கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக கடைசி அமர்வு தனித்துவமானது,மற்றும் சிறப்பாக செயல்பட்டது, இது அரசாங்கத்தின் மட்டுமல்ல, முழு நாடாளுமன்றத்தின் சாதனையாகும். எல்லா விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்களை நாங்கள் விரும்புகிறோம். தரமான விவாதங்கள் இருக்க வேண்டும், உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் இருக்க வேண்டும் என்பது முக்கியம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பு அவசியம் தேவை என தெரிவித்தார் நரேந்திர மோடி