Kathir News
Begin typing your search above and press return to search.

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா வாபஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது . எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை செயலாளர் கடிதம்.

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா வாபஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  5 May 2023 11:00 AM GMT

சட்டசபை கூட்டத்தொடரில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றியமைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பல்வேறு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் மே தினத்தன்று அறிவித்ததை தொடர்ந்து அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை விரைவாக தொடங்கப்பட்டது.


இதை முறைப்படி சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் எம்.எல். ஏ.க்களுக்குக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கும் நிகழ்வு சட்டசபை செயலாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட திருத்த மசோதா அரசால் திரும்ப பெறப்பட்டு விட்டது என்று சட்டசபை செயலாளர் கி சீனிவாசன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முறைப்படி தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு முறைப்படி இந்த கடிதம் அனுப்பப்பட்டதன் மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News