ரேஷன் அரிசிக்கு பதில் பணம் வழங்காமல் தில்லுமுல்லு ஊழல்! புதுவையில் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசிக்கு பதில் பணம் வழங்காமல் தில்லுமுல்லு ஊழல்! புதுவையில் ஆர்ப்பாட்டம்
By : Kathir Webdesk
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு இலவச அரிசியும் 5 மாதங்களுக்கு அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்கப்பட்டது. இதில் 17 மாத காலத்துக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தரவேண்டிய அரிசிக்கு பதிலாக பணமாக பொது மக்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, வங்கிக் கணக்கில் 17 மாத காலமாக அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்படாதை கண்டித்தும், உடனே வழங்க வலியுறுத்தியும் நேற்று (செப்.12) பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் விஞ்ஞான ஊழல்! விசாரணை நடத்த கிரண்பேடி அதிரடி உத்தரவு!!
முற்றுகையின் போது காவல்துறையினர் ஏற்படுத்திய தடுப்புகளை மீறி குடிமைப் பொருள் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் குடிமைப் பொருள் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.