பெண்கள் அமைச்சர்களாக முடியாது! குழந்தைகளை பெற்றெடுத்தால் போதும்! தாலிபான் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதும் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
By : Thangavelu
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதும் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போதில் இருந்து பெண்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் விதமாக தாலிபான்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஒரு சில நாட்களாக தாலிபான்கள் ஒவ்வொரு அறிவிப்புகளாக போட்டு வருகின்றனர்.
அதில், விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்றுக்கொள்ளவே பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாலிபான்களை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் அமைச்சர்களாக முடியாது என்று தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி கூறியுள்ளார். இது பற்றி ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்திற்கு சையது அளித்துள்ள பேட்டியில், பெண் அமைச்சர்களாக முடியாது. பெண்கள் அமைச்சர்களாக முடியாது. மேலும் பெண்கள் அமைச்சர்களாகவது என்பது பெண்கள் அவர்களின் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும்.
பெண்கள் அமைச்சர் சமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க மட்டும்தான் வேண்டும். போராடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ள முடியது என்று கூறியுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Yahoo News