மகளிர் நல அமைச்சகம் கலைப்பு ! கேள்வி குறியாகும் ஆப்கான் பெண்களின் நிலை !
Breaking News.
By : TamilVani B
கடந்த 20 ஆண்டுகள் கழித்து ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியயிய கைப்பற்றியுள்ளனர். இவர்கள் ஆட்சி செய்த போது பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.
இந்நிலையில், தற்போதுள்ள ஆட்சியில் அது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் சொல்லியதற்கு மாறாக அனைத்து வேலைகளையும் செய்துவருகின்றனர்.
தற்போது அங்குள்ள மகளிர் அமைச்சகத்தை கலைத்துவிட்டு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என்ற ஒன்றை நிறுவியுள்ளனர். இந்த அமைச்சகம் 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானில் இருந்தது தான்.
இந்த அமைச்சகத்தின் முக்கிய பணியே பெண்களையும் சிறுமிகளையும் தண்டிப்பது தான். அதாவது பெண்கள் தனியே வெளியே சென்றாலோ அல்லது கை, கால் போன்ற பாகங்கள் தெரியும் படி உடை அணிந்தலோ அவர்களை பொது இடத்தில் நிற்க வைத்து சவுக்கால் அடிப்பர். தற்போது மீண்டும் இந்த அமைப்பு ஆப்கானில் உயிர்பெற்றிருப்பது அந்த நாட்டு பெண்களிடையே அச்சததை ஏற்படுத்தியுள்ளது.