மகளிர் கல்லூரியில் நடக்கும் அத்துமீறல்கள் - மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா தமிழக அரசு?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
By : Bharathi Latha
தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருக்கிறது. மதுரை சேர்ந்த விக்டோரியா மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், ஐகோர்ட்டில் வக்கீல் ஆக பணியாற்றி வருகிறேன். கடந்த மூன்றாம் தேதி அன்று சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த வீடியோவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முன்பு,தத்தனேரி மயானத்திற்கு சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்று இளைஞர்கள் மது அருந்திவிட்டு கூச்சல் எட்டு மாணவிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவற்றை தட்டி கேட்ட மாணவியின் தந்தையே அடித்து தாக்கி, அங்கிருந்த மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். இது தொடர்பாக மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதே போல் கடந்த 30ஆம் தேதி மதுரை சிட்டி மங்கலத்தில் உள்ள கல்லூரி வளாகத்திற்குள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்து நுழைந்த இளைஞர்கள் அங்கிருந்து காவலாளியே தாக்கியதுடன் மாணவிகளை அவசரமான வார்த்தைகளை திட்டி அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பாற்று நனையுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த பெண்களின் பாதுகாப்பிற்காக நிர்பயா நிதி என்ற பெயரில் குறிப்பிடத்தொகை மத்திய அரசு உருக்கியது.
எனவே அந்த நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் நுழைவு வாசலில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையின் போது இந்த ஒரு வழக்கில் உரிய பதிலை அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
Input & Image courtesy: Hindu news