Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பெண்கள் உணவு கட்டுப்பாடு முறையில் கவனம் காப்பது ஏன் ?

Women diet chat after 40 years.

இந்திய பெண்கள் உணவு கட்டுப்பாடு முறையில் கவனம் காப்பது ஏன் ?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Oct 2021 12:00 AM GMT

வயது அதிகரிப்பதன் காரணமாக, பெண்கள் பலவீனமடைகிறார்கள். இது போன்ற சமயங்களில், சீரான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். பெரும்பாலான பெண்கள், தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். சரியான உணவு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களை பலப்படுத்திக் கொள்ள இயலும். வயது அதிகரிப்பதால், உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் உடல் ரீதியாக பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன. கால்சியம் குறைபாட்டின் காரணமாக, எலும்புகள் பலவீனமைடகின்றன. இதனால், மூட்டு வலி மற்றும் எழும்பு தேய்மானம் போன்றவை ஏற்படுகின்றது.


செரிமானம் அமைப்பு குறைந்த செயல்திறன் மிக்கதாக மாறுகிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கிறது. எனவே, கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப பொறுப்புகளின் காரணமாக, பெரும்பாலான பெண்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை கவனிக்க மறந்து விடுகிறார்கள். ஒரு பெண் தனது 40 களில் உணவு பழக்கதில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? பெண்கள் தங்கள் குழந்தைகள், கணவர் மற்றும் பெற்றோர்களை கவனித்துக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். எனினும், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வதில்லை. பெரும்பாலும், 40 வயதிற்குட்பட்ட பெண்கள் சுய கவனிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவதில்லை.


ஏனெனில், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் 40 வயதிற்கு பிறகே தொடங்குகிறது. அதிலும், 40 வயதிற்கு பிறகு பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை அடைவதால் உடல்நல பிரச்சினைகள் மோசமடைகின்றன. வயத அதிகரிப்பதன் விளைவாக, பல வியாதிகளின் அச்சுறுத்தல்கள் எழுகின்றன. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, பெண்கள் தங்கள் அன்றாட உணவில் கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை, பலவீனத்தைத் தடுக்கின்றன மற்றும் உடலை பலப்படுத்துகின்றன.


வயதுக்கு ஏற்ப உடல் எடை அதிகரிப்பதால், உணவில் கலோரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெண்கள் 40 வயதிற்கு பிறகு உணவில் கலோரிகளின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில், வளர்சிதை மாற்றம் வயதுக்கு ஏற்ப குறைகிறது. உணவில் கலோரிகளை குறைத்து கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. 40 வயதிற்குட்பட்ட பெண்கள் ஆல்கஹால் மற்றும் காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை மாதவிடாய் நிறுத்தத்தை பாதிக்கின்றன. இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால், உணவில் உப்பை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவில் உப்பைப் பயன்படுத்துவதன் காரணமாக இதயம், சிறுநீரகங்கள் மற்றும் தமனிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. பெண்கள் 40 வயதை எட்டும்போது எதை நினைவில் கொள்ள வேண்டும்? 40 வயதிற்கு மேல், வயிற்றைச் சுற்றிய தசைகளில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இதன் அதிகரிப்பதன் விளைவாக நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் முதுமை ஏற்படுகின்ற அபாயங்கள் அதிகரிக்கின்றன. எனவே உணவு பழக்கத்தின் திட்டம் தொடர்பாக நீங்கள் ஏற்கனவே 30 வயதைக் கடக்கும்போது தீர்மானிக்கவேண்டும்.

Input & Image courtesy: Logintohealth



Next Story
கதிர் தொகுப்பு
Trending News