ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது அவர்களுக்கு தொழில் திருமாவளவன் பேச்சிற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு!
ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது அவர்களுக்கு தொழில் திருமாவளவன் பேச்சிற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு!
By : Kathir Webdesk
இந்து கோவில்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின இதைக் கடுமையாக விமர்சித்த நடிகையும் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் அவர்கள் தொடர்ந்து திருமாவளவனை விமர்சித்தவர் இருந்து வந்திருந்தனர் அப்போது செருப்பால் அடிக்க வேண்டும் என விமர்சித்திருந்தார் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டனர் இது தொடர்பாக டில்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், " விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து தர்மத்தில் உள்ள குறைபாடுகளை சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கத்துக் குட்டிகளுக்கு தெரியாது. குடித்து விட்டு கார் ஓட்டுகிற தற்குறிகளுக்கு தெரியாது. பெண்களை வைத்து தொழில் செய்து, கைதாகி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகி, ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த தற்குறிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன தெரியும்? அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில்.
ஆகவே, அது அவர்களுக்கு கலையாக தெரியலாம்.அதை கலை என்ற அடிப்படையில் தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். அந்த கற்றுக் குட்டிகளுக்கு விடை சொல்லப் போகிறோம் என்ற முறையிலே, அவர்களுக்காக நாம் நமது சக்தியை விரயம் ஆக்குவது என்பது வீண் என என்னை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தோழர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள். நாம் மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
இது போன்ற பதர்களுக்கு பதில் சொல்வதற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம். பா.ஜ., ஆர்எஸ்எஸ் திட்டமிட்டே என் பேச்சை சர்ச்சை ஆக்குகின்றன" என்றார்.திருமாவளவனின் பொத்தாம் பொதுவான நடிகைகளைப் பற்றிய இந்த பேச்சிற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.