Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி - பெண்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி

பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிப்பது வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பெண்களின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி - பெண்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி
X

KarthigaBy : Karthiga

  |  3 Aug 2023 7:15 AM GMT

குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் பெண்களுக்கான அதிகாரம் குறித்த மந்திரிகள் மாநாடு நடந்தது. ஜி 20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இம்மாநாடு நடந்தது. அதில் பிரதமர் மோடி காணொளி காட்சியின் மூலம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :-


பெண்கள் செழித்தால் உலகம் செழிக்கும் . பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிப்பது வளர்ச்சியை அதிகரிக்கும். பெண் தொழில் முனைவோருக்கு சமமான போட்டி சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். அவர்கள் சந்தைகளில் நுழைவதற்கான முட்டுக்கட்டைகளை அகற்ற வேண்டும். அவர்கள் கல்வி பெறுவது சர்வதேச முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அவர்களின் குரல் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்கும்.


உதாரணமாக மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை கண்டுபிடித்தது கூட ஒரு பெண் தான். அவர் பெயர் கங்காபென். பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க சிறந்த வழி அவர்கள் தலைமையில் வளர்ச்சியை ஏற்படுத்துவது தான்.இந்த திசையில் தான் இந்தியா பயணிக்கிறது. உதாரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தானே முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் எளிமையான பழங்குடியின பின்னணியில் இருந்து வந்தவர்.


இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருக்கிறார். உலகின் இரண்டாவது வலிமையான படையின் முப்படை தலைவராக இருக்கிறார். ஓட்டு போடும் உரிமையும் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.நாட்டின் 14 லட்சம் மக்கள் பிரதிநிதிகளில் 46 சதவீத பிரதிநிதிகள் பெண்கள் ஆவர். அதுபோல் 80 சதவீத நர்சுக்களும் மருத்துவச்சிகளும் பெண்கள்தான்.


கொரோனா காலத்தில் அவர்கள் முன்வரிசையில் இருந்து செய்த பணிகளுக்காக நாடு பெருமை படுகிறது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக 'முத்ரா' திட்டத்தில் 70 சதவீத கடன்கள் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திற்கு 80 சதவீத பயனாளிகளும் பெண்கள்தான். உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு சுமார் 10 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2014 - ஆம் ஆண்டுக்கு பிறகு தொழிற்சாலை பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.


நான்கில் ஒரு பங்கு விஞ்ஞானிகள் பெண்களாக உள்ளனர். அவர்களின் கடின உழைப்பால்தான் சந்திரயான், ககன்யான் போன்ற திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. இன்று ஆண்களை விட உயர்கல்வியில் அதிக அளவில் பெண்களே சேர்கிறார்கள். அதிகமான பெண் விமானங்களை பெற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்திய விமானப்படை பெண் விமானிகள் தற்போது போர் விமானங்களை ஓட்டுகிறார்கள். இவ்வாறு மோடி பெண்களை புகழ்ந்து பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News