Kathir News
Begin typing your search above and press return to search.

மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு- மத்திய மந்திரி ஸ்மிரிதிரானி தலைமையில் தொடக்கம்

மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாட்டை மத்திய மந்திரி ஸ்மிரிதிரானி தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு- மத்திய மந்திரி ஸ்மிரிதிரானி தலைமையில் தொடக்கம்

KarthigaBy : Karthiga

  |  16 Jun 2023 2:15 PM GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் மகளிர் ஜி 20 உச்ச மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ், ஜெர்மனி , இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா தென்னாப்பிரிக்கா , நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் மாமல்லபுரம் வந்துள்ளனர் . மாநாட்டுக்கு மகளிர் ஜி 20 அமைப்பின் தலைவரும் சங்கீத நாடக அகாடமியின் தலைவருமான டாக்டர் சந்தியா புரேச்சா தலைமை தாங்கினார்.


மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதிரானி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிர் ஜி 20 மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மகளிர் ஜி-20 மாநாட்டு மலரை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி விழா மேடையில் வெளியிட்டார். இந்த மாநாட்டு மலரின் பிரதிகள் வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் அனைவருக்கும் மாநாட்டு குழுவினரால் வழங்கப்பட்டது.


இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் பலர் மந்திரி ரானியுடன் குழுவாகவும் தனித்தனியாகவும் நின்று புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள பெண் பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கில் பறக்கும் தங்கள் நாட்டு தேசியக்கொடி முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிந்தது .பல்வேறு சுய தொழில்கள் மூலம் சாதனை படைத்தவரும் பெண்கள் பலர் மகளிர் ஜி 20 உச்சி மாநாட்டின் அரங்கில் தங்கள் கலைப் பொருள்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.


இந்த கண்காட்சி அரங்கை மத்திய மந்திரி ஸ்மிருதிரானி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய தொழில் செய்யும் பெண்கள் பல்வேறு கலை படைப்புகளையும் உணவுப் பொருள்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர். சில பெண்கள் அழகாக சுடுமண் சிற்பங்கள் செய்து காட்சிப்படுத்தினர் .


சேலைகளில் ஜி 20 மகளிர் மாநாட்டின் அடையாளத்தை ஜரிகை வேலைப்பாடுடன் சில பெண்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். ஊட்டி தோடரின பெண்கள் கைவண்ணத்தில் தயாரான துணி பைகள் அதே போல் ஜவ்வாது மலை தேன், முறுக்கு போன்ற தின்பண்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டது .இவற்றை மத்திய மந்திரி ஸ்மிருதிராணி பார்த்து ரசித்து சுய தொழில்களில் வருமானம் ஈட்டும் பெண்களின் தனித்திறமையை பாராட்டி வாழ்த்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News