Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு வேலை - மத்திய அரசின் அதிரடி பணி நியமனம்!

ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கப்படுகிறது. இதற்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.

ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு  வேலை - மத்திய அரசின் அதிரடி பணி நியமனம்!

KarthigaBy : Karthiga

  |  12 April 2023 8:00 AM GMT

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைகள் தொடங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து நிறைவேற்றிக் கொள்கிறார். இந்த திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.


'ரோஜ்கார்' என்று அழைக்கப்படுகின்ற இந்த திட்டம் இளைய தலைமுறையினரிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் 21,000 பேருக்கும் மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன உத்தரவுகளை நாளை வழக்குகிறார்.


ரயில் மேலாளர் ,ரயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ,சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் ,வருவாய் உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள் ,ஆசிரியர்கள், நூலாசிரியர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் .புதிதாக பணியமனம் செய்யப்படுபவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார்.


மேலும் புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள் 'கர்மயோகி' பிரராம்ப் என்கிற ஆன்லைன் பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சிகள் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் மனிதவள கொள்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News