Kathir News
Begin typing your search above and press return to search.

நாகை அருகே கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி - நெஞ்சை உலுக்கும் அசம்பாவிதம்

நாகை அருகே உத்திரபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாகை அருகே கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி - நெஞ்சை உலுக்கும் அசம்பாவிதம்

Mohan RajBy : Mohan Raj

  |  30 April 2022 5:07 AM GMT

நாகை அருகே உத்திரபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் உத்தரபதீஸ்வரர் கோவில் திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். அப்பொழுது நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது தேர் நான்கு ரத வீதிகளில் செல்லும் பொழுது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்ட தொழிலாளி எதிர்பாராத விதமாக தேரின் சக்கரத்தில் அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

தீபராஜன் என்கின்ற இளைஞர் தவறுதலாக சக்கரத்தில் விழுந்ததனால் தேரின் சக்கரம் அவரின் மீது ஏறியது அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அந்த நபர் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு தஞ்சையில் ஒரு கோவில் தேரோட்டத்தின்போது தேர் தீப்பிடித்து எரிந்ததில் 12 பேர் பலியாகினர், இந்த நிலையில் தற்போது பேர் விபத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் டெல்டா மாவட்டங்கள் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Source - Onc India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News